Posts

Showing posts from December, 2018

கண்ணம்மா.

சின்னஞ்சிறு சிறு குயிலே... கண்ணம்மா... செம்மொழி ஆனவளே.... வெள்ளை நிற இரவே கண்ணம்மா.. வெண்துயர் தீர்பவளே.... காணும் காலை நிலவே... கண்ணம்மா...என் கருத்து சுதந்திரமே..... உட்குரல் கேட்கையிலே.. கண்ணம்மா.. உபாயம் செய்திடுவாய்.... உச்ச பேரழகே கண்ணம்மா.... ஒளியை போன்றவளே.... அத்தி பழச் சுவையே.. கண்ணம்மா... ஆறாடி களஞ்சியமே... கேட்கும் மெல்லிசையே... கண்ணம்மா.. கேழாய் என் உரையே...... காக்கும் கலை நீயே..... கண்ணம்மா.... காதோரம் முத்தம் தாயேன்.... இந்த பிறவியிலே... கண்ணம்மா.. பிரிவினை ஏற்பேனோ... கல்ல கப்படமில்ல..... கண்ணம்மா.. கரு நான் அல்லோ..... என்னியிர் தந்திடவே.... கண்ணம்மா... ஏக்கம் கொள்கின்றேனே.... வாங்கி கொள்வாயோ.... கண்ணம்மா... வரமோ தேவையில்லை.... உறுதி தருவயோ... கண்ணம்மா.. உண்மை காட்கின்றேன்....

பிரிந்தாலும் நீ வாழ்க

கண்களை நான் பார்த்திருந்தேன்,, அழகி உன்னைக் காதலிக்க காத்திருந்தேன்.. போதையில் நான் பூத்திருந்தேன்... புதுவாழ்வு காண நினைத்திருந்தேன்... கனவுகளில் கழித்திருந்தேன்.. கலைந்து நான் விழித்தெழுந்தேன்... தோழியாய் நீ இருந்தாய்... தோற்று நான் மனம் குலைந்தேன்.. வெறுத்து நீ வேண்டாம் என்றாய்... வேதனையால் உடைந்திருந்தேன்.. தோழி நான் நீ என்றாய்.. இனி சோகம் இல்லை நான் என்றேன்... நாட்களில் மறவாய் நீ என்பேன்.. எனினும் மறவேன் நான் உன்னை... கல்யாணம் நீ கலித்திடுவாய்... அன்று என் மனம் வருந்திடுமோ... இல்லை..காகங்கள் கரையாவிட்டால்.. கதிரவன் வருகை தான் மறந்திடுமோ... சோகங்கள் சூழ்ந்துவிட்டால் சுருண்டு நான் குலைவேனோ... இல்லை...சூடுத் தண்ணி நெருப்பில்பட்டால்..சேதாரம் நெருப்பிடுமோ... பொறாமைப் பட வைப்பேனோ..உன்னை என் பொன்ஜாதி அவளிடத்து.... போற்றி உன்னைப் பாட செய்வேனே.. இனி சேற்றில் கால் வைப்பேனா..??. காதல் உண்டு என்னிடமும்... என்னைக் காதலிக்கும் அவளிடமே...என் காதல் அதை அறிவதுண்டு.... உன் கணவன் அவன் வருகையிலே... காலம் அது பதில் கூறும்.. உன் கண்ணிடத்து நீர் தேம்பும்.. அன்று அறிவாய் காதல் மூன்றும்.. அழுவாய் நீ அன்...

மனதில் நீ மட்டும் தான்.

நான் இறக்கும் முன் நீ இறக்க நேர்ந்தால்.. உனக்கு முன் மண்ணில் நான் இருப்பேன்.. உனக்கு பின் நான் இறந்தால் ... மண்ணில் நான் இருக்கும் போதும் மனதில் நீ மட்டும் தான் இருப்பாய்.

நானும் தாய் தான்

காதலும் பிரசவமும் ஒன்றுதான்.. என் வலி , குழந்தை நீ அறிவதில்லை... உன் ஒலி , என் கண்ணை சிமிட்டசெய்வதில்லை..... உனக்கு உயிர் கொடுக்க என் உயிரைத் உருக்குகிறேன்... இப்போது சொல் நானும் தாய் தானே..? - ச.வி.ஆகாஷ்.

முத்தாக நீ பிறந்தாய்

ஆழ்கடலில் முத்தெடுக்க,அன்னை முச்சடக்கி உன்னை எடுத்தாள் தோழி!அடிவயிற்று வலியில் தானே; உன்னை அவள் இன்றெடுத்தாள்...... அன்னை அன்னையை இன்றெடுக்க, அப்பன் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்க ஆசை முத்தம் அவள் தருவாள் அதில் உன்னை விழித்தெடுப்பாள்.... உன் பாதங்கள் பூமியில் படும் போது பூமிக்கு அது கொண்டாட்டம் தானே!.. சுற்றி! சுற்றி! நீ போடும் ஆட்டம் ... உன் அன்னைக்கு அது திண்டாட்டம் தானே!... ஓடி ஆடி அடம்பிடிப்பாய்...அன்னை மடியில் உட்கார துடிதுடிப்பாய்... கட்டளையைக் கடைப்பிடிப்பாய்,சிரிப்பால் நீ சிலரை சிதைத் தெடுப்பாய்..... இத்துனை நிகழும் நிகழ,இனிய தோர் நாளும் மலர,கவிஞன் வரைந்த கலையை உன் அன்னை கண்ணுக்கு காட்டிய நாள் அன்று ,என் தோழியின் பிறந்த நாள் இன்று..... சின்ன சிறுப் பிள்ளை ஒன்று சிலையாக மாறி நிற்க...தோழி! சிற்பி செதுக்கிய சிலையைச் சித்தரித்த நாள் ஒன்று என் தோழியின் பிறந்த நாள் இன்று.... வாழையடி வாழையாக உன் வம்சம் அது வாழ்வதற்கு வந்தாயடி தோழி உன் அன்னை அவள் மகிழ்வதற்கு.... அன்னைத் தொப்பில் கொடியில் பிரிந்த நாள் அன்று... எனக்கு தோழி ஒருத்தி பிறந்த நாள் இன்று.....

கொலைக்காரி

சிறையில் இருக்க வேண்டியவளடி நீ, இங்கு என் முன் சிறுப்பிள்ளைப் போல் நடிப்பதேனோ..? வஞ்சகம் செய்ததுடன் வார்த்தையால் என்னை வதைப்பதேனோ..?? கருவிழியோடு கண்ணங்களும் என்னை கடிப்பதேனோ?? அயோ! பல வண்ணங்கள் என்னை அடிப்பதேனோ?? ஒரு சில பல்லங்கள் என்னைப் உடைப்பதும் ஏனோ?? இங்கு என் உயிர் மெழுகுபோல் உருகுவதும் ஏனோ..?? இதற்கு விடை விடைத்தாளில் இல்லையடி, உன் இமை இமைத்தால் அதில் உள்ளதடி, வெட்கம் வெளியேதான் சொல்லுதடி, வேப்பம்பூவும் காதல் அதில் இனிக்குதடி... உன் அப்பன் அவன் தோற்பானடி என்னிடம், உயிரையும் நான் தருவேனடி உவ்விடம்.. உயிரை தந்த உன் அன்னை எவ்விடம்? கல்லறையிலும் இருப்பேனடி நான் உன்னிடம்.... _ ஆகாஷ்.ச.வி.

வளர்ப்பு தாய்

பால் கொடுத்தவள் பாதியில் விட்ட போதும் எனக்கு தோள் கொடுத்து தூக்கி விட்டவள் நீ.. அம்மா எனக்கு துயரம் ஏதும் நேரிட்டால் தும்பலைக் கூட தள்ளி வைத்து , என் தேகம் காத்த தெய்வம் நீ.. உனக்கு என்ன நான் செய்ய ? என் பிறவி அனைத்தும் உனக்கு தரும் வாய்ப்பு இருந்தாலும் ,வட்டியைக் கூட என்னால் செலுத்த இயலுமொ..? அம்மா... என் அன்னையை மிஞ்சிய உன்னை நான் என்னவேன்று குறிப்பெழுத.... தேகம் தந்தவள் தாய் எனில் , எனக்காக பல தாயகம் செய்த உன்னை என் தாயினும் மேல் வைத்து தாளாட்டி கொஞ்ச வரம் கேட்கிறேன்.

பிறந்தாய் நீ எனக்கு

பாடல்கள் பல பாட எனக்கு பல்லவி தேவையோ.. ?இல்லை அடி.. உன் பாதம் பட்ட பத்து விரல் மண் போதும்.. பாரதி என் வீட்டு படியில் இருப்பான்... வார்த்தை ஒன்று மற்றொன்றை வதம் செய்ய; உன்னை நான் வர்ணிக்க இங்கே இடம் செய்ய ; லஞ்சம் மேல் லஞ்சம் கொடுக்கின்றன... மூன்று லட்சத்தில் உன்னை உரைக்க என்னால் இயலுமோ..? இல்லை இந்த பிறவி முழுக்க நான் முயன்றாலும் வள்ளுவன் சொல் தான் வெல்லுமோ.. எப் பிறவி தவமோ... என் நெஞ்சில் இத்தனை கோடி இதம் வர.. உன்னை கண்ட அந்த நிமிடம் என் கண் அடைந்த பலனோ... கல்லைப் போல் நான் இங்கு நிற்க. காலம் பல கடந்து கடவுள் அவன் தர இயலாத மோட்சம் அடி... நீதிமன்றங்கள் நிரம்பி வலிக்கின்றன..அதிசியங்களில் உன் பெயர் சேர்க்க.. யாரோ ஒருவன் தீக்குளிப்பான்... வேரு யார் உன் நண்பன் தான். வைரமுத்துவை எதிர்த்து இன்று பலர் வரிசையில் நிற்க, கவிதைக்கு உருவம் உண்டு என்று அக்கவிஞனும் ஒப்புக் கொண்டார். கண்ணாடி வெட்கப் படுவதுண்டு உன் கலை அழகினைக் கண்டு பூக்களும் அகதிகளாய் மாறி உன் புன்னகையிடம் தஞ்சம் புகுதல் உண்டு..... தாமரை தலை குணியும் உன் காலணி கர்வம் கண்டு... காதணி போட்டியிடும் ...அந்த கண்ணகியும் அதில...

Following you is my work

ஆரம்பிச்சிட்ட ! ஆரம்பிச்சுட்டா! -அவ பேச தான்டா மச்சா ஆரம்பிச்சுட்டா.. பேசும்போது கண்ண பாத்தா" அவ அப்படியே என்ன கொன்னு புதைத்த (ஆரம்பிச்சிட்ட ஆரம்பிச்சுட்டா அவ பேச தான்டா மச்சா ஆரம்பிச்சுட்டா பேசும்போது கண்ண பாத்தா அவ அப்படியே என்ன கொன்னு) அழகான compereru....... Atlantic top figaru... பார்த்த உடனே பாடையில போடும்.. கண்ணால நீ don't fiyaru... (அழகான compereru....... Atlantic top figaru... பார்த்த உடனே பாடையில போடும்.. கண்ணால நீ don't fiyaru...) என் figaru,என் figaru..... பாத்தவுடனே Shakespeyaru ... Letter எழுதி கொடுத்த மச்சா ரெண்டு பேரும் ஜோடியாக....... (என் figaru,என் figaru..... பாத்தவுடனே Shakespeyaru... Letter எழுதி கொடுத்த மச்சா ரெண்டு பேரும் ஜோடியாக.......) அவளும் தான் தூக்கி எரிஞ்ச ரெண்டு செருப்பு ஜோடியாக.... (போடி போ .... நீ இல்லன வேற ஆலாயில்ல.... 🤔🤔.. அவசர பட்டுடோமோ..... Babyyyyy.....) இதுக்கெல்ல அசர மாட்டேன்டி.. Advice எல்ல over already... அப்பேன் சொத்தே பாதி அழிங்சாலும்.... ஆயுள் முழுக்க காதலிக்க நான் ரெடி..... First lovu ..first lovu.. U are my first lovu......

நீங்காதே என்னைவிட்டு.

ஓவியங்கள் வரையப் படுவதில்லை உண்மையில் பிறக்கின்றன..ஆம் உன் அன்னை கவிஞரே தான்.... அவள் காலைத் தொழுக்கின்றேன்..! அச்சம் தான் அந்த நிலவுக்கும் கூட உன் மச்சம் தான் நிச்சி...

ரசிகன்

பெண்ணினமே பெரும் வரிசையில் நிற்கிறது...நிலவுக்கும் நிபந்தனை இல்லை..அவளும் நிற்கிறாள்... உன்னிடம் வரம் கேட்க ... தருவாய் என கரங்களை நீட்டி காலம் கடந்து காத்துக்கொண்டு இ...

வேண்டுகிறேன்

முடி முத்தழகி , என் முக சிவப்பழகி, உதடோரம் மச்சம் மட்டும் உயிரைக் குடிக்கும் எந்தன் காந்த கண்ணழகி... வெண்ணிலவை வேட்டை யாடும் என் வெற்றிலை உதடழகி... மாமானோடு கொஞ்ச தான் ...