கொலைக்காரி

சிறையில் இருக்க வேண்டியவளடி நீ, இங்கு என் முன் சிறுப்பிள்ளைப் போல் நடிப்பதேனோ..? வஞ்சகம் செய்ததுடன் வார்த்தையால் என்னை வதைப்பதேனோ..?? கருவிழியோடு கண்ணங்களும் என்னை கடிப்பதேனோ?? அயோ! பல வண்ணங்கள் என்னை அடிப்பதேனோ?? ஒரு சில பல்லங்கள் என்னைப் உடைப்பதும் ஏனோ?? இங்கு என் உயிர் மெழுகுபோல் உருகுவதும் ஏனோ..?? இதற்கு விடை விடைத்தாளில் இல்லையடி, உன் இமை இமைத்தால் அதில் உள்ளதடி, வெட்கம் வெளியேதான் சொல்லுதடி, வேப்பம்பூவும் காதல் அதில் இனிக்குதடி... உன் அப்பன் அவன் தோற்பானடி என்னிடம், உயிரையும் நான் தருவேனடி உவ்விடம்.. உயிரை தந்த உன் அன்னை எவ்விடம்? கல்லறையிலும் இருப்பேனடி நான் உன்னிடம்.... _ ஆகாஷ்.ச.வி.

Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்