Posts

Showing posts from April, 2022

உரிமையாகி

எட்டி பிடிக்கும் தூரம் இல்லை எனினும் ஏராளமான கனவுகள் உள்ளே.. எதார்த்தம் ஏக்கம் எத்துனை வார்த்தைகள் அடுக்கி வந்தாலும் எனக்கு புதிரெல்லாம் எவ்வளவு எளிமையாக உன்னை காதலித்துவிட்டேன்..என்பது தான். உனக்கொன்று என்றால் உயிர் துடித்து உறங்க மறுத்து கோபம் அழைத்து உன்னை கொட்டி தீர்க்க தயங்குவதில்லை. ஆம், அவளின் குழந்தை மட்டும் தானே தாயின் கூந்தல் இழுத்து, முத்தம் இழைத்து மார்ப்பில் முட்டி மடியில் உறங்க முடியும்.. உரிமை எனது ஆகி உள்ளூர உயிர் வேர் பிடித்துவிட்டாய். தென்னையாயின் வெட்டிவீசி  விடலாம் என கஞ்சம் சிறிது. என்னை அறியாமலே வாழை ஆகி விட்டால்.. வெட்டி தீர்த்தாலும் வளர்ந்து நிற்பேனே. இடுப்பு வலி தடுக்கி சென்றிட இழர் மரமாய் இல்லாமல் அயிர் கதிர் ஆனாயே  அன்பில் அன்னைத் தோற்தாள் என எண்ணம் இப்போதெல்லாம்..

என்னுயிர்

ஏதும் என்னை சரிசெய்ய மாதும் நீ ஆவாய் என்னுயிரே... காண் உணர் கேளாய் கட்டி அனைத்து  வாரி அணைப்பாயே.. விதையிட்டு விட்டு சென்றாளே.. விதவை நானாய் வீதி அழைந்தேனே.. முத்தமிட்டு மூச்சு கொடுத்தாயே, மூன்றாறீல் என்னை சுமக்கும் தாய் நீயே..!

அன்பு

என்னை கொஞ்சம் நேசித்து தொலையேன் என்னை கொஞ்சம் திரும்பி தான் பாரேன் எனக்கு நீ முக்கியத்துவம் தாயேன் உன் மன சிம்மாசனத்தில் என்னை மட்டும் அமர்த்தி வையேன் என்னை கொண்டாடித் தீரேன் என..... ஏங்கி ஏங்கி களைத்த எல்லா இடங்களிலும் ஒரு பேரன்பும்..... ஒரு பெருங்காதலும் விடை பெற்றுச் செல்கிறது கண்டுகொள்ளப்படாத இடங்களிலெல்லாம் காதல் தங்கிக்கொள்வதேயில்லை .. நிரந்தரமாய். கை விரித்து அணைத்துக்கொள்ளும் அன்பில் சிறைப்பட்டுக்கொள்ளுங்கள் பாதுகாக்கும் சிறகுக்குள் கண்கள் மூடி போதை கொள்ளுங்கள் தேடி வரும் அன்பிடம் நேரம் ஒதுக்கி உட்கார்ந்து கொள்ளுங்கள் கொஞ்சமாய் கொண்டாடித் தொலையுங்கள் இத்துனூண்டு வாழ்வில் உங்களையும் மனதில் எண்ணி நேசிக்கும் மனிதர்களை...  .....அன்பின் மிகுதியில் கிடைக்கும் பாதுகாப்பை உதறிவிடாது .....இறுகப் பற்றிக்கொண்டால் ....அலைந்து களைத்து ஓயும்போது சாய்ந்து கொள்ள வருட மடி காத்திருக்கும் தலைகோதி உறங்க வைக்க இந்த வாழ்வின் ஆகப்பெரும் தேடல் எல்லாம்  கடைசியில்  பரிசுத்தமானதொரு அன்பு மட்டும் தானே!? - பேனா- #அவள்❤️

புத்தன்

புத்தன் என்று நானாகவே என்னை நினைத்து கொள்கிறேன். ஆம், அனைத்தையும் வெளியில் மறைத்து,  தூக்கத்தில் போர்வைக்குள் அழும் பெரிய மனிதன் நான்.

அவளிடம்

எனக்கு தெரியும் தான், நதியில் விழும் நிழவின் பின்பம் எல்லாம் வெளிச்சம் தருவதில்லை என்று. ஆம் பின்பம் தான் எனினும் என்றும் உன்னுடன் இருக்கதான் ஆசைப்படுக்கிறேன். எத்திசையிலும் நீ தானே இன்பமாய் இருக்கிறாய், எதிர் காற்றாக நீ என்னை நீங்கி செல்வதால் தீராத வலி வந்து தீயினுள் நான் ஏறுவதை என்னால் தடுக்க இயலுவதில்லை. துன்பமென உன்னை நான் சொல்லாமல் விடமாட்டேன். துன்பம் தான்  என் வாழ்நாள் கண்ணீரில் கடலாக நீ மட்டும் தான் ஆயிருப்பாய். மற்றவை எல்லாம் ஓடை, குட்டைகள் தான். சொற்கடலும் நீ தான். மௌன அலையும் நீ தான். உன் தவறிய அழைப்பிற்கு நான் வருந்தாத நாள் இல்லை நான். என் அழைப்பிற்கு நீ பதில் அழிக்கவில்லை எனினும் அதே வருத்தம் இன்னும் ஆயிரம் மடங்கு.  கண் பார்த்து கதைக்க உன்னிடம் கவலை மறந்து செழித்து திருந்திறுக்கிறேன். கைக் கோர்த்த அந்த நிமிடம் கருவறை பெற்றேன் என்றேன் அவளிடம். வேறு யாராடி எனக்கு என்று உனக்கு சொல்லி புரியவைக்க என் வாய்ப்பலம் தேவையில்லை. உனக்கே அது தெரிந்திருக்கும். அயர் கதிர் சூரியன் வெளிச்சம் தர மறுக்கையில் தீக்குச்சி தீட்டி நான் இருக்கிறேன் என்றாயே.. நம்பிவிட்டேன். இருந்துவிடு. இல...

இனித்திடுவேன்

நீ தானே என்னை வழி நடத்துக்கிறாய். தீரா துயரமும் திசையில்ல தூரமும் கடக்க கட்டுமரமாய் நீ மாற கடல் கடப்போம் என்றாயே.. உன்னைப் போல் ஒருவரை இதுவரை நான் கண்டதில்லை, காணப்போவதுமில்லை கண்டலும் அதைக் கண்டுக்கொள்ள போவதில்லை, என்று எனக்கு தெரியும். தூக்கனங்குருவி போல் சேமித்து கட்டிய கூடடி நீ; காற்றடித்து கலைய நேர்ந்தாலும் கூட்டைவிட்டு ஒதுங்கி விடமாட்டேன், கூடுதல் பணி செய்து தூக்கி நிறுத்துவேன். யாரடி எனக்கு உம்மை விட்டால் மனத்தோரம் வலி வரும்போதெல்லாம் மடி தந்து நீவியதை மார்ப்போரம் மறைந்திடுமா.? உடலோடு உயிரின் தோழமை நீங்கும்விரை என் காதல் பொய்த்திடுமா.? கவலை வேண்டாம் கானல் நீர்ல்லா நான் காணி குளம் எனினும் நீ பருக இனித்திடுவேன்.

பிரிவு

என் உயிரை கூட நீ தானே பறித்தெடுத்து பத்திரப்படுத்தியிருந்தாய்.. நீ ஒரு வார்த்தை சொன்னால் செத்துவிடத் தவமிருந்தேனே! ஒரு இறப்புக்கூட இருவருக்குமே வரட்டுமென ஏங்கிக் கிடந்தோமே! ஆமாம் ஒரு பிரிவைத் தாங்க சக்தியற்ற பிணைப்பல்லவா நாம்! #அகல்_ஒளி  #அவள்❤️

அறிந்தேன்

என்னால் இவ்வளவு நிம்மதியாக, இவ்வளவு சந்தோஷமாக இருக்க முடியும் என்றே அவள் வந்தபின்பு தான் அறிந்து கொண்டேன்.

மனு

தொட்டும், தொடாமல் காற்று அவள் கூந்தல் பறக்க வெட்டும், வில்லும் விரைந்து என் விழியை சிதைக்க பட்டும், பாதமும் பன்னீர் பாவையவள் சேர்ந்து நடக்க விட்டுவிடு என்னை என பாவம் காட்ட மனு எழுதி கிழித்தேன்.

காதணி

எப்போதும் அவள் மேனித் தொடும் பொருட்களின் மீது மிகையான பொறாமை எனக்குண்டு. அன்றும் அவ்வாறு கடை வீதியில் கடந்து செல்லும் போது காதணிகள் பார்த்து நின்றுவிட்டாள். கண்களில் தேடி ஒன்றை எடுத்து என்னிடம் எப்படி இருக்கிறது என்றாள்.? எனக்கு தெரியவில்லை என்றேன். கோவமடைந்து எனக்கு பிடித்திருக்கிறது, எடுத்துக்கொள்கிறேன் என்றவாறு அணிந்திருந்த புல்லாக்கை கழட்டி புதியதை அணிந்தாள். அழகாக இருக்கிறது என்றேன். ஒரு ஓரப்பார்வை வைத்தாள். ஆமடி, என்றாவது நீ நாரையும், முள்ளையும் ரசித்ததுண்டா.? பூவோடு தானே அவை மணக்கும். பூவடி நீ உன்னோடு எது இணைந்தாலும் அவை மணக்கும், நான் உட்பட என்றேன். உள்ளூர சிரித்தாலும், வெளியில் காட்டாமல் போட இதையெல்லாம் நீ வக்கனையாகதான் பேசுவாய் என்று சொல்லி நகர்ந்தாள். ஆம். பூ தான் அவள் அவளால் தான் நான் மணக்கிறேன் என்று மனத்தோடு மறுமுறை நினைத்து மறைத்தேன்.