நானும்
ஏதேனும் கீரல் விழுந்தாலும் ஏதோ உடல்நடுங்கி விழுங்கி விடுவது ஏனோ எதையும் நினைக்க வழியில்ல வண்ணம் ஏக்கம் மட்டும் என்னுடன் இருப்பதேனோ விழியில் எந்த தேடலுமின்றி விதவையாக நிற்கும் மனம் சுற்றியறிய யாருமின்றி சுடுகாடு பிணம் போல் அனலும் நானும். அன்பு செலுத்தி கடக்க தான் நினைக்கிறேன் அரிவாள் போல் வெட்டி கிறிதே வலி ஆயிரம் அலைகள் என்னுள்ளே அடித்து வெடிக்கும் பாவமும் நானும். கண்ணீர் துடைக்கும் கைகள் வந்தால் கவனித்து நடித்து கலகம் செய்கிறேன் கற்பம் போல் வளரும் கவலை மரத்தை வெட்டி எறிய எப்படி.? வேரும் நானும். சோர்வு சேர்ந்து சோகங்கள் சூழும், சுகமே இல்லை என்ற எண்ணம் மட்டும் வாழ தூக்கிற்கு படி அளக்கும் பாதையும் நானும்.