வெற்றிடம் வண்ணப் பூஞ்சோலை ஆகாதோ.. வேட்டையாட ஆங்கே தேனும் உன்னை நாடாதோ; பட்டை-தாடி வைத்தால் பாகம் உன்னை தேடாதோ...! பாதி கண் பார்த்தால் காவி நிறம் தான் அங்கே மாறாதோ..? விதைத் தானே வேராகும் உன் விதைக் கண்ணில் நீர் தேம்பும். மயங்கி நிற்கும் என் கரத்திடத்து மயில் தான் பதில் கூறும்... பெற்றெடுத்த பொற்சிலம்பு பெண்ணாக இருக்கையிலே.. பெண்மைச் சினம் கொள்ளும் தன்மம் பேரளவில் ஜொலிக்கையிலே... கடன் பெற்ற சிறு நிலவும் காலம் கோரி நிற்கையிலே.. கடி அடி எழுதத்தான் என் என் முடி முனை வேற்குதடி.. குழிகள் வெட்டி வைத்து -கண்ணத்தில் கையையும் சேர்த்து வைத்தால் ஆண் வர்க்கத்தை ஆழ நேரும் போல் அழகு -சொல்லுக்கு ஒப்பனைப் போல். பிறந்த நாள் உடனே மைக்கு வேலை போல்.. சுற்றி போட உன் தாயிக்கும் காதல் போல். விழியிடத்து என்ன வினைச் செய்கிறாய் என்னை வீணாக விழ செய்கிறாய்.. விற்கும் வைர கல்லை; வெட்டி வெளியேதான் வீச முயல்கிறாய்.. கழுத்தோரம் காதணி ஆட காற்றுக்கு அனுமதி அளிக்கிறாய் .. களம் சென்று படைச்செய்ய என்னுடன் காற்றுக்கு உயில்செய்கிறாய்.. பொறாமை வேண்டாம் என பெண்மையைப் போராட செய்கிறாய்.. பொறுமைத் தேடி அவர்களை துறவு பயில இய...