தம்பி
அள்ளி அணைத்து விளையாடியிருப்பேன்.. அன்னை இல்லாத நேரத்தில் துள்ளி உன்னைக் கிள்ளி அடித்து ஓடோடியிருப்பேன்.. வந்த போது புதிதாய்.. வயது எரிச்சல் கொண்டிருந்திருப்பேன்.. வளர்ந்த போது மெதுவாய் அழகை ரசித்துக் கொண்டிருந்தேன்.. எத்தனை அடி அடித்தும் கோபம் மறைய கண்டிருப்பேன்.. யாவரும் அறியா வண்ணம் மோதல்களை மறைக்க பழகி இருப்பேன்.. அழுக நான் நேரிட்டால் கண்கள் கலங்கி நீ துடைக்க உணர்ந்திருக்கிறேன்... அம்மை அப்பன் அறியாததை நீ அறிய வைத்திருப்பேன்.. என் பாலைப் பகிர்ந்தவனே என்னுள் நிரைந்தவனே.. இரண்டாண்டு இடைவெளி தவிர வேறு என்ன கண்டேன் நான்.. என்னுடன் பிறந்த தாய் தந்தை நீ தானே .. என்னை இசைக்கும் அன்பு தம்பி...!