நீங்காதே என்னைவிட்டு.
ஓவியங்கள் வரையப் படுவதில்லை
உண்மையில் பிறக்கின்றன..ஆம்
உன் அன்னை கவிஞரே தான்....
அவள் காலைத் தொழுக்கின்றேன்..!
அச்சம் தான் அந்த நிலவுக்கும் கூட
உன் மச்சம் தான்
நிச்சியம் வெல்லும் என்று..
மாறடித்து மறைவதை பார்க்கின்றேன்...மழலை
உன் பிறப்பும் சரித்திரம் தானோ...!
உன் அன்னை மேல் தான் சற்று
கோபம் எனக்கு....
குழந்தை உன்னை கொஞ்சும்
வாய்ப்பை நான் இழந்ததற்காக....
படை எடுக்க ஆர்வம் காட்டுகிறேன்
எனினும் அன்பிள் அவள்
ஆயிரம் சிறந்தவள்
அடியில் நான் இழக்க கூடும்....
முத்துக்கள் உருவாக முன்னூறு
ஆண்டுகள் ஆகும் என்று எந்த
முட்டாள் சொன்னானோ..!
பத்து மாதத்தில் உன்னை பார்த்தவுடன் அந்த பண்ணாடையும்
பதுங்கி கொண்டான்...
பச்சரிசி சாதம் போல் பற்கள்
இருந்திருக்கும்....
பண்டைய கால தமிழும் உன்னுள்
விழைந்திருக்கும்...
பாதங்கள் சிவந்திருக்க..
பால் ஆடை மேனி இருக்க...
வேதங்களை நீ ஈர்க்க...
பெற்றவுடன் உன் அன்னையும்
வியந்திருப்பாள்..கூற்றில் தவறுருப்பின் உன் தாயரை கேட்டுப்பார்.
தாழ்ந்த முடி உடையாள்..தமிழில் நீ
தன்மைக்காக பெயருடையாள்..
பிறந்த நாள் இன்று உடையாள்..
தோழி நீ என் மனதில் என்றும்
நீங்கா இடம் உடையாள்..
என் கண்களைக் கொண்டு உன்
கண்களைப் பார்க்க முடியவில்லை..
முடிந்தாலும்....
என்னால் என் கண்ணை மீட்க
இயலவில்லை...நெஞ்சை தொட்டு
சொல்லுகிறேனடி பொறாமைப்
பட வைத்துவிட்டாய்.....என்று
புலம்புகொண்டுயிருக்கிறேன்...
அந்த உதடோரம் உள்ள குழி என்னை என்னவோ செய்கின்றது
என் இனத்திற்கே நீ வகுத்த குழி
என்று புரிகிறது....உன்
அம்மையைச் சுற்றி போட சொல்..
அப்படியே அந்த பூவுக்கும் ஆறுதல் சொல்..
முடிந்தால் எனக்கும் விளக்கம் சொல்.....
முகத்தால் முப்படையை எப்படி
வெல்வதென்று....
ஆயிரம் உறவு தேடி வரும்போதும்
இந்த அடியனை மறவாமல் இருந்தால் போதும்...
எனக்கு ஐந்தடி நிலம் ஒதுக்கும்
போது அருகினில் நீ இருத்தல்
வேண்டும்....
பிறந்ததற்கு என் நன்றி....
இனி வாழ இயலாது தோள்
கொடுக்க நீ இன்றி..
Comments
Post a Comment