Posts

Showing posts from May, 2022

நீ

துன்பம் நான் பிறந்தப் போதிலும் தொப்பில் கொடி அறுக்கையில் துடித்து எனக்கு வலிக்குமென்று அலறும் என் அன்னை நீ, முதுகின் மேல் என்னை சுமந்த மூச்சை தரும் என்னை தந்தை நீ தூரத்தில் வானம் துயரத்தில் நான் சோகங்கள் சூளும் போது என்னை தனிக்கும் மழை மேகம் நீ. தொட்டிலிட்டவள் வீதியில் கட்டிலில் செல்லும் போது என்னுடன் இருந்த வலிதான் நீ துலைந்தேன் என்று நினைத்தப்போது தூக்கு கயிறை பிடுங்கி வீசிய வளர்ப்பு தாய் நீ. நான் தூங்கும் போது என் கண்ணீர் நீ எழுகையில் என் புத்தகம் நீ. பத்தாம் வகுப்பில் அப்பாவின் பாக்டில் திருடிய பானிப்பூரியின் பத்து ரூபாய் நீ. பன்னிரெண்டில் படியிலிருந்து என்னை நோட்டமிடும் பாக்யா எனும் என் பட்டப்பெயர் நீ. விடைத்தாளில் தெரிந்தே நான் எழுதிய பிழை நீ விடைபப்பெறும் போதும் நணபன் பகிர்ந்த தொலைப்பேசி எ(ண்) நீ. ஆழியில் எனுக்கு மட்டும் கிடைக்கும் முத்து நீ அழிகில் நிலவின் வெளிச்சம் நீ முதல் முதலில் மிதிவண்டி ஓட்டி விழும்போது முட்டி மேல் எழுந்த தழும்பு நீ முத்தம் தர கிட்ட வருகையில் முஞ்சைத் திருப்பும் குழந்தை நீ வெட்டி கதைப் பேசும் போது என் பாட்டி சொல்லும் கு...

இலியாஸ்

என்றேனும் நான்  செத்துப்போனதாய் கேள்விப்பட்டால், ஓடிவந்து திகைத்து நிற்காதே...  செத்து போனதை உறுதி செய்ய இசிஜி எடுத்து பார்க்காதே.. நாடி பிடித்தும் பார்க்காதே...  மாறாக, அழுது கொண்டிருக்கும் குடும்பத்தினருக்கு கேட்காதவாறு ... என் காதருகே வந்து ஒரு பயணம் போவோமா என கேள்... நீ கேட்டும் பதில் இல்லை யென்றால் அது மரணம்தான்... _-மலையாள கவிஞர்_ _இலியாஸ்_

பாவம்

பெற்றக்கடனென்று நினைத்துவிட்டு பிறப்பளித்து சென்றுதான் யார் செய்த பாவம்.? பின்னிரவில் கண்ணீரெல்லாம் பழகிவிட்டு கருகும் நெஞ்சம் தான் யான் பெற்ற சாபம். என் தீராத வலிகள் எல்லாம் அவள் உள்ளளங்கை தாங்கும், உடல் உரசி அமரும் நீமிடம் தானே பிறப்பாய் உணந்தேன் நானும். அமர வைத்து ஆசை காட்ட அதில் மீசை பிள்ளையாய் நானும்  தலையை ஆட்ட, மரணப்படுக்கையில் மறையுமா காதல்.? உன் மடியில் சேராமல் முடியுமா என் தேடல். அரவணைத்து அழுகவெய்கிறாய் சில சமயம், அழுக வெய்து அரவணைக்கிறாய். சொல், குரல் பூக்கள் நீடினாய்; நீ தானே என் வண்ணத்துப்பூச்சியாய் வாசம் தந்து சுவாசம் சேர்க்கிறாய் வளையும் என் வான் நிலவு நீயாய். ஏனோ சொல்கிறேன் கருவறை மட்டுமே தானே கொடுத்தாள் அவள் என் காதலை வாங்க எவள் இங்கே. கண்ணீர் துடைக்க ஆளிருக்க பாரம் குறைய உன் கண்ணீர் துடைப்பது நான் இல்லை என்ற பாவம் அறிக்கும் என்னை. கவிதை வரியில்லை தொடர்வது கண்மணி உன் மேல ஆணையாக எனக்கேதும் நேர்ந்துவிட்டால் கவலையில்லை உனக்கேதும் நேர்ந்துவிட்டால் நானுமில்லை.

சண்முகா ரெடிமெட்ஸ்

“ஏத்தி ரெண்டு கிலோ சேத்து கொடுவே.. காசாண்டி வாங்கிக்கோ.."வஞ்சம் வேணவே, என்று இரும்பி கிளரினாள் கிழவி. இத, இதுப்பாரு பாட்டி இந்த முற இல்ல, “நான் எந்த வஞ்சமும் செய்யல, இருந்த உனக்கு இல்லாண்டியா..மூட்ட இல்ல கிழவி, அடுத்த முற தாரேன், அந்த சின்ன கடலையாண்டாம்  அப்புறவ பையக் கொடுத்து விடு" , என்று சொன்னார், ரெஷன் கடையாளர். சேரி மவளே.. கொஞ்சம் இருந்த கூட போட்டு வையும் அவன அனுப்புவேனாக்கும். யா, வாரேன் என்று தன் முட்டி செத்த காலுடன்  முடியாமல் அடிகளை நகர்த்தினாள் அவள். கிழவி பெயர் தேனழகி..ஆம் தேனைவிட அழகி தான். ஒரு முறை சோமு கிழவியிடம் கேட்டதுண்டு வண்டுதான கிழவி அழகு, அது என்ன தேனு , தேனழகினு உனக்கு எவன் பேரு வெச்சான்...? வெட்கம் அந்த பல்லழிழந்த பவடு முகதை அடையும் போது மிரலன் சொன்னான், எடே நீ மூடுல சொம்பு., கிழவி உண்மையாவே தேனு தான்ல..அங்க பாருவே எப்படி வடியுது அழகு...என்று நாவரும் சிரிக்க, தேன்தான் அதிகம் வடிந்தது. எமே, அது என் வீட்டாரு வேச்சதுவே. என் மாமால அவரு, தேனுனா அவருக்கு அம்புட்டு இஷ்டம் நான் புறந்தச்ச சொன்னாராம தேனு பேரு வையு, நான் ஆசைய கூப்பிடவேனு..அப்ப வைச்சதுடே, இந்த பேரு...