Posts

Showing posts from July, 2023

இதயம்

ஏன் இத்தனை யோசனைகள் எனக்குள் யார் யாரையோ பார்த்து ஆசைக் கொள்கிறேன் யாவும் கிட்டே வருகையில் விளகி விடுக்கிறேன் ஏதோ தெரியாத புதிர் எல்லாம் எழுப்பி என்னை நானே புதைக்க நினைக்கிறேன் காதல் கொள்ள மனம் முயன்றும் காமம் கொள்ள உடல் முயன்றும் கடந்து செல்லும் நான் யாரோ..? பெண்கள் பார்த்தால் ஆசை தூவும் பெறாத இன்பம் இசையும் சேரும் பெற்று கொண்டு சென்றுவிட்டால் தேடல் தீரும் என்ற பயமோ எனக்கு.? பேர் எழுதி மடலிட்டு பேனா முள்ளும் முத்தமிட்டு கட்டி அணைத்து கட்டில் ஏறி காலம் போக்க வினை எதற்கோ..? எல்லாம் வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் நேரம் கரைய ஆசை மாறும் உள்ளம் எல்லாம் கரையாய் மாறி ஊற்றெடுத்து உயிர் வரை பாயும் செத்தப்பின அழுவோர் வேண்டி சேகறிக்கிறேன் சொந்தகள் நானும் மற்றப்படி யாரும் வேண்டாம் மனைவியே என் மாற்றுச் சிந்தனை. இரவிலே உறக்கம் இல்லை வெளிச்சம் தான் நான் பெறவேயில்லை கண்ணுள்ளே ஓடும் யாவும்  கையுக்கு வந்து சேரும் மாயை அழித்து வர ஒரு நல்ல இதயம் வேண்டும்.

சகி

தீ முதல் நீர் வரை தினம் எனை திண்ணும் தாமரை மோக முடி வைத்து மூச்சை நிறுத்தும் கண் அலை, வேத வினையெல்லாம் வேர்வையாவும் நெஞ்சலை தூது சென்று போர் தொடுத்தாள் உயிரை பறிக்கும் உதடு வலை மேல ஏறியவன் வீழ்ந்திடவே மேனி தாங்கா கடலலை மிச்சம் வைத்து உச்சம் தொட்டால் உயிர் வழியும் ஆவலை. பாலாடை நிறம் ஏந்தி பட்டுடை அணிந்த வந்தாள் மேலாடை நீக்கிடதான் மேனி ஆசை எதற்கு இணை.? பஞ்சம் நீக்கி பாசி ஆற்றி பாவம் பார்த்து ஊட்டி விட்டாள் தூங்கும் நேரம் போக தொட்டில் ஆட்டுவேன் என்னவளை. இடுப்பு கட்டி இனிப்பு தட்டி இரவெல்லாம் முத்தம் ஊட்டி முதுகிலே கோலம் காட்டி முடிவேலே பாடம் சூட்டி, படுக்கையில்  பட்டம் தீட்ட ஆசை கொண்டு ஒரு வட்டம் இட்டேன். வயிறிலிலே என்ன ஓசை அதற்கு கீழே, நான் காணாத இசை மீசை தொடாத ஆசை பாடாத புத்தன் போல கடந்த செல்ல முத்தம் தர இடம் தேடி  முடிவிலே இசையுடன் அசைப்போட்டேன். தேவதை உடை வேண்டும் தேவையில் இடை வேண்டும் கேளடி என் இருயிர் நீ என்னுயிர் கூட்டி கொண்டு செல்லடி சகி.

கவி

எத்தனை எழுதுகிறேன் யார் யாரோ படித்து விட்டனார், பாராட்டுக்கள் பல தூரும் பாவங்களும் வந்து சேரும். காதல்,காதலர் மேனி, மின்மினி மிச்சம், யச்சம், மிகுதி, தகுதி ஆண், பெண் ஆசை, மீசை என எழுத்துகள் அடிக்கி வந்திருக்கிறேன். முகம் தெரிய நபரும்  முத்தமிட்ட நபரும்  ரசித்து மிகைக்கையில நானும் கவிஞன் என்ற கர்வம் கர்ப்பம் கொள்ளும். விருதுகள் உண்டோ..? ஆம். வார்த்தை வர்த்தகமா..? ஆம். வலிகள் மொழியாகுமா..? ஆம். தனிமையில் தோழித்துணையா.? ஆம். மௌனம் இசை வழியா.? ஆம். அத்தனையும் அணைத்தெடுத்து கட்டி முடிச்சியிட்டு குழித்தோண்டி புதைக்க இடம் பார்த்து கவிதை என பெயர் வைத்தேன். ரசிக்க ரசனை இல்லை எழுதி கிழித்து இடமெறிந்தாலும் இறுதி சடங்கு போல் என்னும் உறுதி இல்லை. வந்தோர் மகிழ்ச்சி சென்றோர் மகிழ்ச்சி சிக்கி தவிக்கிறேன்  சில வலைப்போல். காட்டுக்குள் ஓடும் போது காலுக்கு தான் பாரம் நிலமாக இருக்க வேண்டி சருக்காக ஆனதென்ன.. விதையை விரும்பும் மனிதர் யாரோ புத்தன் கூட பூ விரும்பி கவிதை கிறுக்கின் கவலை தானே கண்கள் யாவும் நீர் தழும்பி...