முத்தாக நீ பிறந்தாய்

ஆழ்கடலில் முத்தெடுக்க,அன்னை முச்சடக்கி உன்னை எடுத்தாள் தோழி!அடிவயிற்று வலியில் தானே; உன்னை அவள் இன்றெடுத்தாள்...... அன்னை அன்னையை இன்றெடுக்க, அப்பன் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்க ஆசை முத்தம் அவள் தருவாள் அதில் உன்னை விழித்தெடுப்பாள்.... உன் பாதங்கள் பூமியில் படும் போது பூமிக்கு அது கொண்டாட்டம் தானே!.. சுற்றி! சுற்றி! நீ போடும் ஆட்டம் ... உன் அன்னைக்கு அது திண்டாட்டம் தானே!... ஓடி ஆடி அடம்பிடிப்பாய்...அன்னை மடியில் உட்கார துடிதுடிப்பாய்... கட்டளையைக் கடைப்பிடிப்பாய்,சிரிப்பால் நீ சிலரை சிதைத் தெடுப்பாய்..... இத்துனை நிகழும் நிகழ,இனிய தோர் நாளும் மலர,கவிஞன் வரைந்த கலையை உன் அன்னை கண்ணுக்கு காட்டிய நாள் அன்று ,என் தோழியின் பிறந்த நாள் இன்று..... சின்ன சிறுப் பிள்ளை ஒன்று சிலையாக மாறி நிற்க...தோழி! சிற்பி செதுக்கிய சிலையைச் சித்தரித்த நாள் ஒன்று என் தோழியின் பிறந்த நாள் இன்று.... வாழையடி வாழையாக உன் வம்சம் அது வாழ்வதற்கு வந்தாயடி தோழி உன் அன்னை அவள் மகிழ்வதற்கு.... அன்னைத் தொப்பில் கொடியில் பிரிந்த நாள் அன்று... எனக்கு தோழி ஒருத்தி பிறந்த நாள் இன்று.....

Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்