Posts

Showing posts from November, 2020

எழுநூறு ரூபாய்

Image
பேருந்தில் பயணம் என்றாலே பாகற்காய் கடிப்பது போல் எனக்கு. நிறைய சமயங்களில் நான் விரும்புவதில்லை.நண்பணுடன் என்றால் எமனிடம் கூட பேருந்தில் செல்வேன். ஆனால் வேறு யாருடனும் செல்ல மனம் ஏற்பதில்லை. என்ன செய்ய நண்பனில் உறவு இல்லை, என் உலகமே இருக்கிறது. அன்றும் அவ்வாறு ஒரு பயணம் தான். இந்த விநாயகர் சதுர்த்தி தினங்களில் எப்படியாவது விடுதி உணவை நாக்குக்கு காட்ட கூடாது என்பது எனது எண்ணம். தாய்யின் சுவை 17 வருடம் ஆண்ட மண்ணில் பஞ்சம் வந்து, பதறி தவிக்கும் மக்கா கூட்டத்தில் நானும் ஒருவன் தான். பல சமயங்களில் ஏதோ கடல் மண்ணில் கிடைக்கும் பலபலக்கும் கற்கள் போல் தான் இருக்கும் எங்கள் விடுதி இட்லி. சரியாக ஞாபகம் இல்லை எனினும் நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது, எனது அறிவியல் ஆசிரியர் ஒருவர் செய்திதாளைக் கொண்டு வந்து இது தான் நிலவின் செயற்கைக்கோள் வரைப்படம் என்று காண்பித்த அந்த படத்தை தான் தோசை என்ற பெயரில் நான்கு முழுங்குவேன். இருக்கட்டும் இன்று அதற்கு பாய் .! பாய்..! நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஏதோ பாளையம் எனும் முடிவுச்சொல் கொண்ட ஊரில் விநாயகர் கோயில் உண்டு, அனைவருக்கும் உணவு உண்டு என்று அறிந்ததும்,...