Posts

Showing posts from March, 2022

அவள்❤️

அவள் இவ்வளவு வலிகளைத் தாங்குகிறாள் என்பதே எனக்கு பெரும் வலிகளைத் தருகிறது. உனக்கு காதல் இருக்க வேண்டும் அது எனக்கு தீராத வலியைத் தரும் என்று  முன்பே எனக்கு தெரியும். ஆனால் நீயும் என் போல் கடலில் தத்தளிக்கும் கட்டுமரமாக இருப்பது என்னடி நியாயம்.? இதையெல்லாம் தாங்கும் இதயமாடி உனது. இமை இடை வளராத குழந்தையடி நீ, இன்பம் காண்பாள் என இத்தனை நாள் பீத்தி கொண்டிருந்தேனே. என்னிடம் சொல்ல என்ன தயக்கம் உனக்கு.எதிலும் சுவையாய் தெரிந்தாய், என் வானில் நிலவாய் தெரிந்தாய், கவிதை வரைந்தேன், கண்ணீர் விட்டேன், ஏக்கம் கொண்டேன், சாக திணிந்தேன், சாட்டை எடுத்து அடித்து கொண்டேன், எதிலும் நீ என எண்ணம் கொண்டேன். இருப்பினும் நான் அறிந்திருந்தேன், என்னைப் போல் நீ உணரவில்லை என்று. ஆனால் என்னைப் போல் தான் நீயும் என்பது சாபமாய் தெரிகிறது எனக்கு. கடவுளிடம் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை எனக்கு, வேண்டி கொள்கிறேன் நிச்சயம் உன் ஆசை கரைச் சேரட்டும். உன்னை என்னால் இப்படி காண இயலுவது இல்லை. கட்டி அணைத்து அழுகாதே கண்ணீர் துடைக்க நான் உண்டு என கூற ஆசையிருப்பினும் நீயே தடுக்கிறாய். புரிகிறது காரணிகள்.கதைகள் எல்லாம் உன் கைச் சேரு...

மீனடி நீ

சாலையில் நடக்கும் போது கைப்பிடித்து செல்ல துடித்தேன், முடியவில்லை. கரங்கள் வைத்து நீ பனியினை உருக்க உஷ்னம் தாங்காமல்  உதடினில் வழிவதை எடுத்து துடைக்க ஏக்கம் கொண்டேன் முடியவில்லை கண்களைப் பார்க்க கடவுளிடம் வேண்ட கண்ணதாசனை தள்ளி கவிதை எப்படி !என்று உன் தந்தையிடம் கேட்க ஆசை  முடியவில்லை உயிரை உரிஞ்சம் உதட்டோடு சிரிப்பும் உடலை உரசி இருக்கமான பிடியும் இருந்தால் என்னென்று நினைத்தேன் முடியவில்லை காதலென்று சொல்லி அம்பெய்த ஆசையுண்டு, ஆனால் உவரியில் திளைத்தாலும் உப்புச் சேராத மீனடி நீ அஃது உன்தன் பிழையல்ல என்தன் உயிரின் நிலை.

என்னழகி

கண்ணுக்கு முன் நிற்பாள் எதையும் என்னிடம் கதைக்க மாட்டாள் சிறிது பக்கம் வந்து சில பார்வைகள் தூவி செல்வாள் நிலவை விடுங்கள் அவள் கர்வமழிந்து காணமல் போய்விட்டாள், என்னவள் கண்ணிடம் மோதி  வெல்ல முடியும் என்று சொன்ன  ஒருவரைக் கண்டதில்லை. ஒரு கதைச் சொல்கிறேன் கேழுங்கள். காலை நான்கு மணி இருக்கும் யாரோ கதவை தட்டும் ஓசை கேட்க இந்த நேரம் யார் என்று திறந்து பார்த்தேன். இரு உருவம் வந்து சந்திரன், சூரியன் என அறிமுகபடுத்தி கொண்டன. சந்திரன் முதலில் முந்தி அவளைக் காலையில் மட்டும் வெளியே வரச்சொல்  அந்த சூரியனாவது வயிரெரிந்து கொண்டு தாங்கி கொள்ளட்டும் என்றது. மூஞ்சை சுளித்து நீ கொஞ்சம் நிறுத்தையா.. இரவில் மட்டும் அவளை வரச்சொல்லுங்கள் சந்திரன் தேய்ந்து சாமாளித்து கொள்ளட்டும் என்றது. இருக்கதையும் கேட்டு, காலையில் மட்டும் பார்க்கும் உனக்கும் இரவில் மட்டும் பார்க்கும் உனக்கும் இவ்வாறு உடல் இழைக்கிறதே. காலையும், இரவும் பார்க்கும் என்னை யாராவது நினைத்து பார்த்தீர்களா என்றேன். இருவருக்கும் பரிதாபம் வளர்ந்தது. அவள் எனக்கே பாவம் பார்ப்பதில்லை உங்களை நான் எப்படி பரிசிலனை செய்வேன் என்று ஆறுதல் உரைத்து ...

இருள்

இருட்டிலே வாழ பழகியவன் நான். விளக்கு எடுத்து பக்கம் வந்தாள். எனக்காகவா.? என்றேன். ஆமாம் என்று பொய் உரைத்தாள். அவளுக்கு புரிவதில்லை நான் குருடன் தானே தவிர மடையன் இல்லை என்று.

நிலவு

ஆறுதல் ஆயிரம் சொல்லிவிட்டேன் நிலவிற்கு, தேறுவது போல் தெரியவில்லை, தேம்பிகிறாள். எல்லாம் உன்னால் தான்.. உன்னை யார் வரச்சொன்னார் இரவில்..? நீ பழகில் வருவதின் வயிரெறிச்சால் தாங்காமல் தான் சூரியன் எறிகிறான் என்னால் அது கூட முடியாதே என புலம்பிக் கொட்டிகிறாள் என்னிடம். வழியின்றி தட்டி விடுகிறேன் அவளுக்கு. தேய்ந்து விடுகிறாள் சில நேரம், காணாமல் போவதும் உண்டு. கடிதம் எழுதி கொண்டிருக்கிறாள்  உனக்கு, விரைவில் வெளியேறிகிறாளாம் வானில் நீ வந்து குடி எறும் நாளை வீண் மீன்கள் கொண்டாட உள்ளதாம். பொறுத்து கொள் சில நாள் தான் அவள் சென்றுவிடுவாள்; என்ன இருந்தாலும் அவள் நிலா ஆயிற்றே சிறிது வலிக்க தான் செய்கிறது எனக்கு. இப்படிக்கு, நிலவின் ரசி.

விட்டொழி

அவளுக்கு யாருமில்லை  அவளுக்கு நான்தான் இருக்கிறேன்  நான் இல்லையென்றால் அவள் என்னாவாள் அதனால்தான் எல்லா கோபமும் மறந்து அவளிடம் மீண்டும் மீண்டும் போய் நிற்கிறேன் என்றேன் நண்பனிடம். இல்லை நண்பா  உன் கற்பனையை விட்டொழி.  நிஜமாய்  உனக்குத்தான் யாருமில்லை என்றான். #யாத்திரி.

தாங்கயிலுவதில்லை

Image

கவிதையானவள்

கவிஞர்கள் தினமாம் நீ என்ன எழுதப் போகிறாய் என்று கேட்டாள். என்னவென்று சொல்ல, உன் முள்ளுருப் பார்வையில் என் முதுகெலும்பு உடையும் அதை எழுதவா..? கண்ணீல் நீ வைக்கும் மைப்போல் என் கரங்கள் கரையும் அதை எழுதவா...? சின்னச்சிறு பேச்சால் என் செவி நனையும் அதை எழுதவா..? சில நேரம் எனை மறுத்து போக சிதைந்து விழுந்து இதயம் கருகும் அதை எழுதவா..? மின்மினிப் போல் உதடு சினுங்க மின்னல் கோடி என் வாசல் தட்டும் அதை எழுதவா..? கண்ணின் ஓரம் சிறு கரை படும் அதன் காரணியின் விதை எழுதவா..? உன் காதணி மேல் தீராத கோபம் கண்ணம் படும் அந்த உரை எழுதவா..? காலணி போல் கீழ்க்கடக்க ஆசை வரம் தருவாயா.? என கடிதம் எழுதவா..? காணாத கோலம் போல் புன்னகை, புயல் வீசும் என்னுள் நுவல் எழுதவா..? பாவமடி வானவில், உன் கூந்தல் நிறமில்லை அவளிடம், பொறாமைக் கொண்டாள் புகல் எழுதவா..? பஞ்சம் பிழைக்க வந்தவள் நிலா இரவில் வெளியில் வாராதே! பட்டு தெய்ந்து விடுவாளென பறை எழுதவா..? பார்க்காமல் நீ சென்று விட்டால் பதறி நிற்கிறேனே பயந்து நானும் கூறு எழுதவா..? பனிப்படும் இழயாய் பணிந்து போகிறேனே உன் பேச்சை கேட்டாள் பாசம் காட்டு என்று உயில் எழுதவா..? என் கனவினுள் வருக...