Azadi
எனது பள்ளி பருவத்தில், என் வரலாறு ஆசிரியர் சொன்ன Imperialism, colonisation, Communism, Fascism, Buddhism போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்து படித்ததே இல்லை. அந்த மதிப்பெண் மட்டும் தான் ஒரே நோக்கம், அவர் சொன்ன பாடங்களும் அவ்வாரே, நாள் போக்கில் மறைந்தது தான். சிறு வயதில் இருந்த இட்லரை பற்றி அதிகம் படித்தவன் நான். இன்னும் சொல்ல போனால் என் ஆரம்ப புள்ளியே விகடன் இதழ் வெளியிட்ட இட்லர் புத்தகத்தை படித்தது தான். அதில் இருந்தே இட்லிரின் மீது இணைப்பிரிய ஓர் பந்தம் எனக்கு.அவர் செய்த கொலைகளில் ஏதோ நியாயம் இருப்பது போல் தான் இன்றும் வாதாடுவேன். என்றும் Fascism மின் எதிரி என்றாலும் இட்லரை ஏதோ முளையில் நினைப்பது தவறு தானே. நமது கல்லூரியில் கோகுல் அண்ணா கொடுத்த இட்லரின் வதைமுகாம்கள் என்ற நூலை படித்தேன், எத்தனை கொலைகள், எப்படி எல்லாம் கொலைகள் செய்ய பட்டு இருக்கின்றன , மனித மிருகம் கூட இப்படி செய்து தானே, எனினும் இட்லரின் காதலில் சிறிதும் அடர்த்தி குறைதல் இல்லை. Steven Spielberg எனது ஆசைககுரிய இயக்குநர் இயக்கி,Liam Neeson, Kingslay போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த Schilnders list படம் பார்த...