Posts

Showing posts from October, 2020

பஞ்சர் கடை பட்டதாரி.

Image
துணி தைப்பவர்கள் நூல் கண்டுகளைப் போட்டு வைக்கும் டாப்பாவில் இருந்து ,ஒரு நூலை மட்டும் தனியே எடுக்க முயன்றால் பல நூல்கள் பின்னி இருப்பதை காணலாம் அது போல் பின்னி இருந்தது மரக் குச்சிகள். சாலை போடுவதற்காக வெட்ட பட்ட மரக்குச்சிகளை சேமித்து அடுக்கி வைத்திருந்தை பார்த்தபடி இருக்க, எங்கள் வீட்டு கிழவி சத்தம் கேட்து. டே....டே... சந்தையில் 6அடி உயரம் கொண்டு கொங்கு தமிழிலே கத்தும் வியாபாரி தோற்பான் என் பாட்டியிடம்.எனக்கு என் பாட்டியின் கதையை ஒரு புத்தகமாக எழுத ஆசை, நிச்சயம் எழுதுவேன் என்று நம்பிக்கை உண்டு. விரைந்து செலவதெல்லாம் என் ரத்தத்தில் இல்லாத ஒன்று, எனினும் உங்க அப்பன் குப்பிடரான் என்றதும் ஓடி சென்றேன். அப்பா என் அனைத்தும் அந்த ஜிவன் மட்டும் தான். வேலைக்கு கிளம்பும் அவர் எங்கள் இருச்சக்கர வாகனம் பஞ்சர் ஆனதை அறிந்து என்னை அழைத்து பஞ்சர் போட சொன்னார். நானும் சுற்றி ,சுற்றி பார்த்து காத்து தான் கம்மியாக இருப்பது போல் உள்ளது என்றாலும், அப்பா உறுதியாக பஞ்சர் என்றார். சரி என வீட்டில் இருந்து சில மீட்டர்கள் தூரத்தில் உள்ள பஞ்சர் கடைக்கு வண்டியை தள்ளி கொண்டு நிறுத்தினேன். ஒரு...