அண்ணா, இப்போது தான் “மலையில் இருந்து இறங்கி கொண்டு இருக்கிறோம்" என்றாள் இந்திரா. ம்..சரி பொறுமையா வாங்க நான் காத்திருக்கேன் என்று சொல்லயவாரு இணைப்பைத் துண்டித்து, பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிதிற்கு நடையை கட்டினான் கௌதம். பெண்கள் கம்மியாக இருப்பதைக் காண முடிந்தது. மாலை நேரம், கல்லூரிகள் இருந்து இருந்தால் நன்றாக இருக்கும் என்ற அர்ப்ப புத்தி நெஞ்சில் உதித்தது அவனுக்கு. சாலையை கடக்கையில் எப்போதும் இருக்கும் நடமாடும் ஏடிஎம் இயந்திர வண்டி இல்லை, 200 ரூபாய்க்காக நடு வீதியில் நின்று விளம்பர காகிதங்கள் கொடுக்கும் கல்லூரி மாணவர்கள் காணவில்லை. கிட்டத்தட்ட அவர்கள் வர 1 மணி நேரம் ஆகும், என்ன செய்ய, என்று சிந்தித்து காந்திபுரம் புது பேருந்து நிலையம் அடைந்தான் அவன். நின்றது ஈரோடு தனியார் பேருந்து, SCP. எப்போது எடுப்பீங்க என்று அவன் கேட்க, நடத்துனர் தண்ணீர் குடித்தப்படி 1 என்று விரல் செய்கை செய்தார். மகிழ்ச்சி, 20 ரூபாய் மிச்சம், காரல் மார்க்சின் படத்தை தொலைபேசியின் முன் பகுதியில் பார்த்து ஒரு வெட்க பார்வை. சுத்தி பார்த்தான். அந்த பேருந்து நிலையத்திலிருக்கும் ஒவ்வொரு த...