பிரிந்தாலும் நீ வாழ்க

கண்களை நான் பார்த்திருந்தேன்,, அழகி உன்னைக் காதலிக்க காத்திருந்தேன்.. போதையில் நான் பூத்திருந்தேன்... புதுவாழ்வு காண நினைத்திருந்தேன்... கனவுகளில் கழித்திருந்தேன்.. கலைந்து நான் விழித்தெழுந்தேன்... தோழியாய் நீ இருந்தாய்... தோற்று நான் மனம் குலைந்தேன்.. வெறுத்து நீ வேண்டாம் என்றாய்... வேதனையால் உடைந்திருந்தேன்.. தோழி நான் நீ என்றாய்.. இனி சோகம் இல்லை நான் என்றேன்... நாட்களில் மறவாய் நீ என்பேன்.. எனினும் மறவேன் நான் உன்னை... கல்யாணம் நீ கலித்திடுவாய்... அன்று என் மனம் வருந்திடுமோ... இல்லை..காகங்கள் கரையாவிட்டால்.. கதிரவன் வருகை தான் மறந்திடுமோ... சோகங்கள் சூழ்ந்துவிட்டால் சுருண்டு நான் குலைவேனோ... இல்லை...சூடுத் தண்ணி நெருப்பில்பட்டால்..சேதாரம் நெருப்பிடுமோ... பொறாமைப் பட வைப்பேனோ..உன்னை என் பொன்ஜாதி அவளிடத்து.... போற்றி உன்னைப் பாட செய்வேனே.. இனி சேற்றில் கால் வைப்பேனா..??. காதல் உண்டு என்னிடமும்... என்னைக் காதலிக்கும் அவளிடமே...என் காதல் அதை அறிவதுண்டு.... உன் கணவன் அவன் வருகையிலே... காலம் அது பதில் கூறும்.. உன் கண்ணிடத்து நீர் தேம்பும்.. அன்று அறிவாய் காதல் மூன்றும்.. அழுவாய் நீ அன்பின் ,மூலம்.... சாபம் இல்லையடடி இது...சத்தியம் சொல்லும் மடி அது... வாழி யடி நீ ... வாழை போல் இனி.....

Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்