வேண்டுகிறேன்
முடி முத்தழகி ,
என் முக சிவப்பழகி,
உதடோரம் மச்சம் மட்டும்
உயிரைக் குடிக்கும் எந்தன் காந்த கண்ணழகி...
வெண்ணிலவை வேட்டை யாடும்
என் வெற்றிலை உதடழகி...
மாமானோடு கொஞ்ச தான்
மாவெல்லம் சேர்த்து வைத்த
மஞ்சள் மார்பழகி...
நெற்றி முடி கீழே விழும்..
உன் மயில் விரல் அதை மெல்ல
தொடும்...
காற்றினிலே கவிப்பாடும் உன்
கட்டளைகள் என் காதில்
விழும்....
தட்டி தட்டி அந்த கண்ணும்
என் இதயத்தை நின்று சுடும்...
பார்த்த பொழுது போதும்.
என் பார்வையே அழிந்து விடும்..
எடுத்து உன்னை அள்ளி சென்று
எம்புதையல் போல் காக்க வேண்டி..
படுத்து பல நாட்கள் ஆகி..
பட்டீனியோ பாதகம் செய்தும்..
இறக்கும் நிலை எனுக்கு வரும்முன்
உம் மடியோடு இடம் தருக..
கடவுளின் காலை தொட்டு கரைய
நான் ஆசைக் கொள்கிறேன்.
Comments
Post a Comment