Posts

Showing posts from June, 2022

தாயிடம் தந்தி

நீந்தி கடல் சேரும் மீனிடையே நீங்கி கிணற்றில் விழுந்த கதை நானோ தூக்கி எறிந்த தூண்டில் ஒன்று தூக்கி வளர்க்கும் என யார் அறிந்தார், அம்மா; பிணம் திண்ணி நானென்று பிறப்பை வெறுக்கும் மனம் கூட மடி தந்து, மர்ப்பை முட்டும் மாயானம் தொடும் என் உயிர் நீயோ, அம்மா; இறக்கை இழந்த பறவைக் காக்க இதழ் கொடுத்து வார்த்தை வளர்க்க பட்டம் கட்டி வானில் ஏற பாலம் அமைத்த என் மெய் நீயோ, அம்மா; தொழுது அழுகும் இறைவன் கூட தொட்டில் கட்டி ஆட்டவில்லை மற்றவர் பிள்ளை நானென்று நினைக்காத மனம் தானே, வயிற்றில் சுமக்கும் எனது தாயே. நீயே அம்மா; உதிரும் பூக்கள் எல்லாம் தரையில் போடத் தானே, தலையில் எடுத்து வைக்கும் தகுதி யார் அளிப்பார்.? ஊதி உன்னருகே இழுத்த பட்டாம்பூச்சி நீ தான், அம்மா. காதல் என்று நான் எழுத கண்ணில் ஏனோ கலக்கம் நிறையும் உன் கனவு காதல் கட்டியணைத்தால் என் காதலும் கூட இன்ப கண்ணீர்விடும்; அம்மா கருவறையில் கொடியாய் என் கல்லறையில் மடி சேரும் மலராய் ததும்பி நான் அழுதுவிட்டால் விரும்பி கண் துடைத்திடுவாய் விரல் சேர் உயிர் சேர் என்னுள் நீ  எதிலும் நீ. பெற்றவள் பிரிந்து விழ பிறந்தவனும் எரிந்து விட மற்றவர் யாரென மனதோரம் காய...