அரிதாக தான் அவளை அப்படி காணமுடியும். கரையை மோதும் அலையைப் போல இடையிடையே அவை நகரும் போது சில வண்ணங்கள் தெரியும், என் எண்ணங்களும் மாறும். காற்றிலினிலே மா ஆடும் பலாக் கூட ஆடுமா என்ன..? இல்லை தான் அவை சிறிது அசைய மட்டும் செய்கின்றன. எங்கிருந்து வந்தது இந்த மூக்குத்தி இத்தனை நாட்கள் நீ அதை காணவில்லையே என்று முட்டாள் மனம் மூளையை அடிக்கும். காலிரண்டு வலையத்தினுள்ளே கரைத்தொடும் பாகம் அது தானே மண் என்ன தவம் செய்தது அப்படி பொல்லாது பாவம் செய்ததோ என் கைகள். கண்களை கொண்டுள்ளாள் பாவம் நான். சில மின்னல்கள் தோன்ற மேகங்கள் மோத தேவையில்லை, மோகம் தோன்றல் போதுமானது. கூரையைப் போல் பின்னிய கூந்தல் இன்றில்லை, இறக்கை விரித்த பறவைத் தான் பின்னங்கால் வரைப் பறந்தது தான் அழகு. நெற்றியலே வைத்திருப்பாள் சிறு கட்டி பொட்டு. வேர்வையில் வடிந்து வந்து இமையில் அமர்ந்தது ஒரு வியப்பு. கோப்பு ஓர் அடுக்கு, புல்லாக்கு ஈர் அடுக்கு, எடத்தட்டு மூன்றடுக்கு... போதுமடி எத்தனை அடிகளை தாங்கும் கைத்தடி இதயம். ரவிக்கை எந்த நிறம் ரணக்கணங்கள் மறைக்கும் தடம், ராவரவில் சேர்த்தெழுத சொற்கள் விக்குதடி. நிலவினை ரசிக்க இ...