கண்கள்
மொழிகளின் தாய் தமிழோ.. விழிகளின் தாய் இவளோ.. விருப்பமான இடம் பார்த்து விளையாடுவது என் மனமோ.. விளைவு தான் என்னவென்று விலகல் பார்வை உரைத்திடுமோ பற்று கொண்டு பார்கையிலே பாதி உயிர் கரையுதடி.. சற்று நேரம் பொருத்திருந்தால் சாதிக்க பல இருக்குதடி.. வெட்டி பார்வை இல்லையடி என் வேதனையெல்லாம் அதில் அடங்குதடி.. வீரன் என்னைத் தான் விழி ஒன்று வீழ்த்ததான் நேருதடி..