Posts

Showing posts from February, 2022

கருவறை நீ

மூவிரண்டு கம்பி சன்னல் மூச்சை நிறுத்தும் தாரகை மின்னல், இரூயிர் இழக்க வழிச்செய்ய இன்னும் கொஞ்சம் அதை திறந்தால் என்ன..? காதணி தெரியும் கழுத்தின் மெய்யழகு புரியும் வேதனை என்ன வென்றால் வெட்கம் வந்து துலையும் பாராத நொடி என்னைப் பார்த்து நீ சென்று விட்டால் தீராத ஆசைக்கூட  தித்திக்க கடந்து செல்லும் தீயடி நீ தெரியுமா உனக்கு.? எறிவது நான் தானே உன் பார்வைத்தான் பொறுப்பு. எத்தனை பிழை என்னில் நீ தான் திருத்தி செல்ல கற்றவை அனைத்தும் வீண் என காதோரம் சொல்கிறாய் மெல்ல நானல் சாயும் நழிந்து குழந்தையாய் நானும் மெழிந்து உன் கைவிரல் பிடித்திட போதும் வேறு என்ன வேண்டும்  என் நாட்கள் போதும் உன்  கம்பல் சினுங்கி ஆட சிறு கூந்தல் அதை நீ எடுத்து மூட சமையல் செய்யும் பொழுது கூட என் சவங்கள் ஆடுவதென்ன. கண் பார்க்க அந்த நிமிடம் கவலை கரையும் இந்த இடம் உயிர் உரையும் அது வேறு கதை, உண்மையில் வேறு யாரடி தேவதை..? வந்து நின்று பேசிவிட்டால் வரம் தானே வேறு என்ன கை அசைத்த போதுதான் தெரியும் நிலவும் பேருந்தில் பயணிக்குமென, காரணிகள் தேட வில்லை கண்களை  பார்த்து நிற்க கல்லறையிலும் எழுதி வைப்பேன், எனக்கு மட்டும் இ...

The Crying Bird

The world seems vast I just thinked about the Past My wings are wet, Oh.! My Tears are red, Nights are there,  But I can't find my sleep anywhere. Once i asked Who are i..? The wind answers  Look up at the sky, I followed the voice, Found an empty space; Here am i.. Tweeting all in vain. Cried a lot So much pain, there comes rain; To match up the Gain. Go to the place Where i left, Oh my world! I'm Just a theft.. Speaking in lone Nobody around I tried myself  to smile in face., Im a bird, i know Through the holes in whole I flied a lot, but can't find a plot. Present are false Who gonna fall.? Never the Next, I need a Rest. Being involved the best i could, Nothing comes to see the Nest I built. I see the moon So much alone We are same on the room Want to hug it in the noon. Nothing i feel Sometimes i heal, The song i hear Is making me Tear. Thanks for the first And Being the last My wings are wet, Oh.!my tears are red..!

முட்டாள்

வாடா, போடா என்று எத்தனையோ பேர் நம்மை அழைப்பதுண்டு. எதிலும் காணாத ஆனந்தம் அவள் அறியாமல் அழைத்த அழகில் அடைந்திருக்கிறேன். முட்டாள் என்று சொன்னால் யாருக்கு தான் கோபம் வராது. முடித்து விட்டாள் விடுக்கதையை. அவள் அழைத்த போது தான் புரிந்து கொண்டேன் முட்டாள் என்பது எவ்வளவு இனிமையான சொல் என்று.

கனா

விழிகளில் நிற்கின்றாள், என் இறவுகளைத் தின்கின்றாள், கனாக்களில் உன்னை அனுமதிக்க மாட்டேன் என்றவள், என் கனக்காகளில் கதாநாயகி ஆகின்றாள். போதுமோ இப்போதை..? வேண்டுமோ வேறுப்பாதை..? தென்றல் என் சன்னலைத் தட்டுமென  திகட்டி திகட்டி அழுகிறேனே.. கண்ணீர் துடைக்க வந்தாள் என்ன.? இரு கைவிரல் கண்ணம் பட்டால் என்ன.? இன்பமடி நீ என்னில் கிடப்பாய் ஏதுமில்லாத என்னை அன்னைப் போல் கட்டியணைப்பாய்.

நீ

பக்கம் பக்கமாக எழுதுகிறாயே, மூன்று வரியில் கவிதை எழுத முடியுமா. என்றாள் சந்தேகத்துடன். நீ.., நீ தான்., நீ மட்டும் தான். என்றேன்.

கர்வம்

“உன் தேடலில் கிடைக்காதது என் தேடலில் கிடைத்தது வரமே💗" என கர்வம் கொண்டாள். என்னடி வரம் பெற்றாய்..,.? என்னைப் போல்  உன் கண்ணை ரசித்தாயா.? ஏக்கம் கொண்டாயா.? காலம் தாண்டி ஓடி, கதவின் முன் வந்து நின்றாயா.? கண்ணீர் விட்டாயா.? காதல் கொண்டாயா.? ரசிக்க பெற்றாயா.? சிதைந்து விழுந்துதாயா.? சிரித்து மகிழ்நதாயா.? கலைந்து கொண்டாயா.? கட்டிலில் பிரண்டாயா.? தூக்கம் இழந்தாயா.? துக்கம் அடைந்தாயா.? பறந்து சென்றாயா.? படகாய் மிதந்தாயா.? பசலை கொண்டாயா.? பாடி உடைந்தாயா.? தாடி வளர்த்தாயா.? தடுமாறி விழுந்தாயா..? உடல் இழைத்தாயா..? உயிர் இழந்தாயா..? இப்படியெல்லாம் சொல்லி மோத ஆசைத்தான். எனினும் அவள் கர்வத்தையும்  ரசித்து கடந்துவிடுகிறேன்.

மீயழகி.

முன்பனித்தான் போலும் முதுகின் மேல் ஏறி நிற்க, வீண்மீன்கள் வீட்டின் கதவை தட்டினவாம், காற்றைக்கூட விடவில்லை அவள் இருந்த இடமென நிலவிக்கிங்கு வேலையினியில்லை. காரணிகள் என்ன தேவை.? காற்றாய் பறக்க நெஞ்சம் இங்கே. கால்கள் தரையில் இல்லை, மீயழகி அவள் என்ன செய்தாள்.? மீறும் இன்பம் கொள்கிறேனே மிதக்கும் போதைமரம் நான். உறங்கி விட முடியவில்லையே கள்ளி கண்களிலே நீற்கினறாளே. உணவுதான் வேண்டாம் என்றால், உயிரினுள் பாயிக்கின்றாளே. சற்று தலைச்சாய்த்தால்  சாலனமில்லாமல் கொள்வாள் போலும் உன் வீட்டின் முன் கோலங்கள் எதற்குடி உன் அன்னையிடம் சொல் என் கண்ணங்குழிகள் போதுமென. காணங்குயில் மொழியழகி காதினிலே ஒலி எழுப்பி என்னை காந்தம் போல் இழுக்கிறாளே பெயரறிந்த விழியகழி பார்வை போதாதென்று என்னை வேர்க்க வைத்து தாக்குகிறாளே. ஒதுங்கி மட்டும் சென்று விடாதே உயிர் தாங்கதாக துயரம் நேரும்; என்னை நீயும் மறக்கும் போது அதுவே நான் உயிர் போகும் நேரம். கற்றுக் கொடுக்கவே ப்ரியப் பட்டவனாயினும் உன்னிடம் மட்டுமே கற்றுக் கொள்ள ப்ரியப் படுகிறேன்....❤️❤️

பூங்கதவே தாழ்திறவாய்

கேளாய் பூமனமே, கேட்டறிவாய் என் உயிரே தாராய் பார்வை எனும் தள்ளிச் செல்லாதே என் உறவே வார்த்தைகள் முடியும் முன்னே உன் மௌனங்கள்  மொழி எழுதும், கண் என நினைக்காதே: அவை என் கல்லறையில் பூவாகும், நினைத்து விழித்திடவா நிழல் போல் அணைத்திடவா காதல் என்று சொன்னால் கருவறைக் கொடுத்திடவா வேண்டாம் என பதிலளித்தால் விரும்பும் வரை வழி வரவா.. காமமும் வேண்டும் தானே காலை வரை இணைந்திடவா, தாக்கும் பொழுது போக தாங்கி உன்னை சாய்ந்திடவா.. பதில் என்ன நான் அறிய பூங்கதவே தாழ்திறவாய்..!

கண்ணீரவள்

எதை எழுத, என்னவென்று எழுத ஏக்கம் தருகிறாய், பாசம் தருகிறாய், கண்ணீர் தருகிறாய், கவிதைகள் தருகிறாய், கவலை தருகிறாய், உயர்விடும் தைரியம் தருகிறாய். இது தான் நீ என என்னால் முடிக்க இயலாது. இமை மூட இரவுகளும் இதயத்தில் கணக்கும் பொழுதுகளும் நினைவுகள் நீந்தி செல்லும் நதி நானாய்; பறவைப்போல் மீன் தேடி உள்ள செல்ல படகின் மேல் வந்து வலையை விரிக்கிறாய். உண்ண இயலாத இன்பம் பயக்கும் கண்கள் முன்வரும் குருஞ்செய்தி கண்டு இடி தாங்கும் இதயம் கூட இமைப் பொழுது  தாங்காது உன் உணர்வில்லாது. யாராயினும் நீ விரும்பி பேச அது நான் இல்லாது போகும் தருணம் நரம்புகள் துடித்து நடுங்கி விழும்; இங்கே பகலில்லாது இரவுகள் தொடரும். தனிமைத்தான் வாழ்வென்று தடுக்கி தடுமாறும் நாட்கள் எங்கும் படரந்து வந்த தொப்பில் கொடியும் அறுந்து தானே போகும், அது நீயா.? பழகி விட ஆசைத்தான் சிறிது சிதறி விழவும் ஆசைத்தான் மரணப்படுக்கையிலும் மறவாத நினைவோடு மலர் வைக்கும் உன் கூந்தல் உதிர்வதைத் கூட மறவேனே.. என் ஆசரியன் சொன்னது போல் என் விழியோரம் வரும் நீர் துழியின்  ஆழம் அறிந்தால் அது போதும். #காதலர் தினம்.

வழிப்போக்கன்

தாங்க முடியாத ஏக்கங்கள் தாக்கி தவித்து வருகிறேன். ஏனோ என்னை கண்டுக்கொள்ளாமல் கடந்து சென்று விடுகிறாள். எப்படி இவ்வளவு எளிதாக இவளால் இது முடிகிறது  என்பதே என்னை வியத்து வருத்துக்கிறது. தோழன் என்று சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, வழிப்போக்கன் என்று விட்டாள் இறந்து தான் விடுவேன்.

சன்னல்

சன்னலைத் திறந்து வைத்தால்  சாரம் போல் நானென்ன பூந்தா வந்துவிடுவேன்..? சரித்தான் போடி, உன் சிரிப்பிற்காக மட்டும் தான் நான் சிலைப் போல அமர்ந்திருக்கிறேன்.