அன்று 22.6.2021. இரவு ஏழரை மணி வரை இன்று அவள் பிறந்தநாள் என்று எனக்கு தெரியாது. எப்போதும் போல் தான் அன்றும் வேலை முடிந்து, ஆறாரை மணிக்கெல்லாம் எங்கள் வாடகை வீட்டின் திண்ணை மேல் அமர்ந்து, வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன். எங்கள் வீட்டின் நேர் எதிரில் கிழக்கை பார்த்து அவள் வீடு இருக்கும். நான்கு அறைக் கொண்ட வீடு என நினைக்கிறேன். அறைகளின் மேல் மின் கம்பிகள் இணைக்க விட்டிருக்கும் துழைகள் கண்டு கணக்கிட்டேன். மேற்கு பக்கம் மட்டும் மூன்று சன்னல்கள் கொண்ட லைன் வீடு அது. எங்கள் வாசலுக்கும், அவள் அறைக்கும் நேர் எதிர். என் அறையில் இருந்து சில முறை அவள் தலை வாறுவதை ரசித்து இருக்கிறேன். முற்றிலும் மூடி தான் இருக்கும், சாமி சில சமயங்களில் தான் தரிசனம் தரும். எப்போதாவது தான் அவள் தெருவை விடுத்து , எங்கள் தெருவிற்கு வருவாள், ஆனால் துணி துவைக்கும் கல்லும், அதை துவற்ற கொடியும் மேற்கு திசையில் இருப்பதால் , மேற்கில் சூரியன் இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை உதிக்கும். அவள் கொடியிலே துணிகளை போடும் போது, எனக்குள் புயல் எச்சரிக்கை கொடி ஏறும். உடையின் ஓரம் ஒரு பார்வை பார்ப்பாள...
Nice
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteநன்றி
ReplyDelete