Posts

Showing posts from November, 2021

மௌனமிடம் கேள்வி.

கல் உடைத்தேன் மண் சுமந்தேன் கரங்கள் கூப்பி வணங்கி கடவுளிடயே வரம் கேட்டு வைத்தேன் காதலென்ன மலை எடையாய் என்ன கிண்டல் செய்த பொழுது போக பால் இருகி நோய் ஆக பற்று வந்து உடல் இழைத்தேன் கண் துறந்து செவி வைத்து சிலையினிலே மலை வரைந்து இடை அடைந்தேன். இருந்தும் பெண் ஒன்று நேரில் கண்டு பிதற்றி நின்று வாய் அடைய சிதறிய கற்கள் யாவும் என்னை பார்த்து சிரிப்பொலிய வெக்கம் வந்து குனிந்து கொண்டேன். நிலா வெட்டி இரண்டாக்கி நிதானமாக பட்டி பார்த்து  எங்கு வைத்தால் எவனும் சாவன் என்று கண் என வைத்து என் கதையை முடித்தான். காதில், தங்கமிரண்டு சிக்கி நிற்க கழுதின் வலைவில் கதைகள் எழுத கண்ணம் இரண்டில் வண்ணம் நிறைய உன் உதட்டில் மட்டும் எனது பார்வை. வந்து வந்து சென்று போகும் பட்டம் அடிக்கும் பூச்சி அவையும் உம்மை தேடும் மாயம் என்ன..? ஒற்று தேகம் தேன் படிவம். உம் விட்டின் வாசல் கண்டு  விந்தை அறிந்தேன் பறவை கூட்டம் திண்ணையில் அமர திணி நீதான் என எனது எண்ணம். காலை கூந்தல் துவற்றும் அழகில் தோற்று போகும் கவிதை யாவும் தூரப் பார்வை ஒன்று போதும் துணிகள் எடுக்கையில் தொலைவேன் நானும். தாவணி போற்றி தனித்து நின்றாள் தயக்கம் வை...