பிறந்தாய் நீ எனக்கு

பாடல்கள் பல பாட எனக்கு பல்லவி தேவையோ.. ?இல்லை அடி.. உன் பாதம் பட்ட பத்து விரல் மண் போதும்.. பாரதி என் வீட்டு படியில் இருப்பான்... வார்த்தை ஒன்று மற்றொன்றை வதம் செய்ய; உன்னை நான் வர்ணிக்க இங்கே இடம் செய்ய ; லஞ்சம் மேல் லஞ்சம் கொடுக்கின்றன... மூன்று லட்சத்தில் உன்னை உரைக்க என்னால் இயலுமோ..? இல்லை இந்த பிறவி முழுக்க நான் முயன்றாலும் வள்ளுவன் சொல் தான் வெல்லுமோ.. எப் பிறவி தவமோ... என் நெஞ்சில் இத்தனை கோடி இதம் வர.. உன்னை கண்ட அந்த நிமிடம் என் கண் அடைந்த பலனோ... கல்லைப் போல் நான் இங்கு நிற்க. காலம் பல கடந்து கடவுள் அவன் தர இயலாத மோட்சம் அடி... நீதிமன்றங்கள் நிரம்பி வலிக்கின்றன..அதிசியங்களில் உன் பெயர் சேர்க்க.. யாரோ ஒருவன் தீக்குளிப்பான்... வேரு யார் உன் நண்பன் தான். வைரமுத்துவை எதிர்த்து இன்று பலர் வரிசையில் நிற்க, கவிதைக்கு உருவம் உண்டு என்று அக்கவிஞனும் ஒப்புக் கொண்டார். கண்ணாடி வெட்கப் படுவதுண்டு உன் கலை அழகினைக் கண்டு பூக்களும் அகதிகளாய் மாறி உன் புன்னகையிடம் தஞ்சம் புகுதல் உண்டு..... தாமரை தலை குணியும் உன் காலணி கர்வம் கண்டு... காதணி போட்டியிடும் ...அந்த கண்ணகியும் அதில் தோற்பதுண்டு. உண்மையில் மூன்று அன்னைத் தான் எனக்கு..,புரியும் என்னுடைய கவலை கணக்கு... வேதனைகள் இனி உனக்கெதற்கு..? விடியல் உண்டு நாளை நமக்கு. வெட்கப் படும் அந்த வித்தையை எங்கு கற்றாயோ? அயோ.! வெண்ணிலாவிற்கும் வேற்கும் வில்லதனத்தைப் புரிந்தாயோ. செவ்விதழ் பூக்கும் அந்த சிறு இதழை எங்கு பெற்றாயோ..? சிரிக்கும் சித்திரத்தை சிலையாக நின்று பார்க்க செய்தாயோ.. இன்று உன் பிறந்த நாள்... இடுப்பு வலியில் உன்னை அவள் இருக்கி அனை த்திட... இமை நொடியில் உன் அன்னையின் கண்கள் சிவந்திட.... எத்தனை எத்தனை பாக்கியம் புரிந்தேனோ..என் அன்னைக்கு முன்னால் இந்த பூமியில் நான் பிறந்திட.. எத்தனை எத்தனைப் பாவங்கள் செய்தேனோ என்னை விட்டு அவள் பிரிந்திட.... கவலை தான் உனக்கு கணவன் வருகையில்.... இருப்பினும் சிறிது கர்வம் தான் நீ என் தோழி என்கையில்..... வார்த்தைகள் திக்குகின்றன.. வரிசைகள் ஏனோ நிற்கின்றன.. மனம் எதையோ நினைக்கின்றது. மாறாக மறதி தான் தடுக்கின்றது.. இனி எனக்கு பிறப்பிருந்தால் பிள்ளையாக மட்டும் இன்றி உன் அன்னையாகவும் பிறக்க வேண்டும்....... இப்படிக்கு, முத்தைப் பற்றி இந்த முட்டாளால் முடிந்த முன்னூறு வார்த்தைகள்.

Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்