Posts

Showing posts from August, 2019

எம்மொழி

காணும் எழுத்தெல்லாம் சித்திரம் எங்கள் கலையினிலே தெரியுமடா சரித்திரம்.. ஆதி அந்தம் அரவணைக்கும் மொழித்திரம் ஆசை மொழி எங்கள் மேல் காட்டும் அன்பு தரம்... வாழ வகுத்த மொழி.. வாய்மை காக்கும் மொழி... வாலை பிடிக்கும் மொழி... வஞ்சகம் வரின் நாவை அறுக்கும் மொழி.. வந்தாரை வாழவைக்கும் நிலத்தவர். வாண்புகழிலும் வழிமாறாமல்பொறுத்தவர் கையேந்தி நின்றுவிட்டால் உயிரையும் கொடுப்பவர் காண இயலாது தமிழர் போல் ஒரு இனத்தவர்... பாசம் காட்டுவதில் தாய்ப்பால் போல் சுத்தம் படை ஏதும் வருவதில்லை செய்ய எங்களிடத்து யுத்தம்.. பாரம் உடல் பிரியும்போது நினைத்திருப்பேன் உன்னை நித்தம் நீ தான் காதல் தமிழே! என் ஒவ்வொரு உயிர்த் துளி ரத்தம்... தாயையும் தமிழையும் வேராக நினைப்பதில்லை தாலாட்டு பாட சொன்னால் அவள் எப்போதும் மறுப்பதில்லை தாங்காது துயர் வந்தால் அவள் மடி போதும் வலியில்லை ... தாங்கி பிடித்து விடுவாள் துணிவு வேறு தேவையில்லை.. மொழிகளின் முன்னோர் மற்றவரெல்லாம் நமக்கு பின்னர் ..மொழிந்திட தேவையில்லை மொத்த உலகம் அறிந்த உண்மை.. கடவுளை வணங்குவதை விட கண்ணான என் தமிழை வணங்குவது அதிகம்.. கடல்போல எழுத்துக்கள் உண்மையில் வலம் அதைவிட தா...

வாழ்க்கை கற்றுத் தருகிறது.

எப்பவும் போல் போரடாதான் வேண்டி உள்ளது...அந்த இரண்டு மணிநேர பயணத்திற்கு சீட் பிடிக்கும் போராட்டம்.. நானும் என் தம்பியும் ,முதல் பேருந்தில் சீட் பிடிக்க போராடி தோற்றுவிட்டோம்.என் வாட்ச் உடைந்தது தான் மிச்சம்.நான் சிறு தூரம் நின்று ..பஸ் சீட் பிடிக்க போராடனும், கல்லூரில சீட் கிடைக்க போராடனும், வேலை கிடைக்க போராடனும், பொண்ணுக்கு போராடனும், புல்ல பெத்துக்க போராடனும்,.. போராடாம எதுமே கிடைக்காது போலனு நினச்சுகிட்ட இருந்தேன் அடுத்த பஸ் வந்துசு... உள்ள ஓடு தம்பி ஓடு...இல்லன இரண்டு மணி நேரம் நிக்கனு...நு ஒ ஒரு குரல்.. அப்பறம் என்ன பஸ் பத்து நிமிஷம் கட்டிபிடிச்சி,அடிச்சிபிடிச்சி,சீட் போட்டான் ஏன் தம்பி... அப்பவும் நான் போல சீட் பிடிக்க.. கொஞ்சம் தைரியம்..தம்பியுடையான் படைக்கு அஞ்சான். உள்ள வந்து கடைசிய உட்காந்தே.. தம்பிக்கிட்ட life is a race..நம்ம ஓடனும் நு சொன்ன..ஓடன பலன் தான் இப்ப உட்காந்து இருக்கோம் நு சொன்ன.. அவனும் ஆமா போட்டான். பஸ் நகர்ந்துசு.... அம்மா அப்பா.. எல்லா நலம் விசாரிச்சாங்க..சீட் கிடச்சுதா இல்லன இறங்கிடு.. அடுத்த பஸ்ல வா.. இல்லன கவர்மெண்ட் பஸ்ல வா..நு சொன்னாங்க.. நான் ஒன்னும் ப...

பதவி

காலம் முள் ஓடுவது உண்மை -அது கதராடையா காவியாடையா என பார்து ஓடுவதில்லை.. பதவியும் கூட அவ்வாறு தான் அது நல்லவனா தீயவனா என்று பார்த்து தரப்படுவதில்லை.. பணம் அதிகாரம் இருந்தால் ..பதவி ஏற்காத பிரதமர் தான்.

ஊழல்

ஓட்டலிலே பத்து ரூபாய் வைத்து பத்தாயிரம் ரூபாய் தின்று பணமில்லை என்று நின்றான் ஒருவன். காவல் துறை வந்தவுடன் கைதி துறை ஆவாய் என்ற போது பத்தை நீட்டி துறையில் இருந்து முறையாய் வெளிவந்தது.. இந்தியாவின் ஊழல் தாரம்.