இனித்திடுவேன்

நீ தானே என்னை வழி நடத்துக்கிறாய்.
தீரா துயரமும் திசையில்ல தூரமும்
கடக்க கட்டுமரமாய் நீ மாற கடல் கடப்போம் என்றாயே..
உன்னைப் போல் ஒருவரை இதுவரை
நான் கண்டதில்லை, காணப்போவதுமில்லை
கண்டலும் அதைக் கண்டுக்கொள்ள போவதில்லை, என்று எனக்கு தெரியும்.
தூக்கனங்குருவி போல் சேமித்து கட்டிய கூடடி நீ;
காற்றடித்து கலைய நேர்ந்தாலும்
கூட்டைவிட்டு ஒதுங்கி விடமாட்டேன்,
கூடுதல் பணி செய்து
தூக்கி நிறுத்துவேன்.
யாரடி எனக்கு உம்மை விட்டால்
மனத்தோரம் வலி வரும்போதெல்லாம்
மடி தந்து நீவியதை மார்ப்போரம் மறைந்திடுமா.?
உடலோடு உயிரின் தோழமை நீங்கும்விரை
என் காதல் பொய்த்திடுமா.?
கவலை வேண்டாம்
கானல் நீர்ல்லா நான்
காணி குளம் எனினும் நீ பருக இனித்திடுவேன்.



Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்