அன்பு
என்னை கொஞ்சம் நேசித்து தொலையேன்
என்னை கொஞ்சம் திரும்பி தான் பாரேன்
எனக்கு நீ முக்கியத்துவம் தாயேன்
உன் மன சிம்மாசனத்தில்
என்னை மட்டும் அமர்த்தி வையேன்
என்னை கொண்டாடித் தீரேன்
என.....
ஏங்கி ஏங்கி களைத்த எல்லா இடங்களிலும்
ஒரு பேரன்பும்.....
ஒரு பெருங்காதலும்
விடை பெற்றுச் செல்கிறது
கண்டுகொள்ளப்படாத இடங்களிலெல்லாம்
காதல் தங்கிக்கொள்வதேயில்லை ..
நிரந்தரமாய்.
கை விரித்து அணைத்துக்கொள்ளும் அன்பில்
சிறைப்பட்டுக்கொள்ளுங்கள்
பாதுகாக்கும் சிறகுக்குள்
கண்கள் மூடி போதை கொள்ளுங்கள்
தேடி வரும் அன்பிடம்
நேரம் ஒதுக்கி உட்கார்ந்து கொள்ளுங்கள்
கொஞ்சமாய் கொண்டாடித் தொலையுங்கள்
இத்துனூண்டு வாழ்வில்
உங்களையும் மனதில் எண்ணி
நேசிக்கும் மனிதர்களை...
.....அன்பின் மிகுதியில் கிடைக்கும் பாதுகாப்பை
உதறிவிடாது
.....இறுகப்
பற்றிக்கொண்டால்
....அலைந்து களைத்து ஓயும்போது
சாய்ந்து கொள்ள
வருட மடி காத்திருக்கும்
தலைகோதி உறங்க வைக்க
இந்த வாழ்வின் ஆகப்பெரும் தேடல் எல்லாம்
கடைசியில்
பரிசுத்தமானதொரு அன்பு மட்டும் தானே!?
- பேனா-
#அவள்❤️
Comments
Post a Comment