உரிமையாகி

எட்டி பிடிக்கும் தூரம்
இல்லை எனினும்
ஏராளமான கனவுகள் உள்ளே..
எதார்த்தம் ஏக்கம்
எத்துனை வார்த்தைகள் அடுக்கி
வந்தாலும் எனக்கு புதிரெல்லாம்
எவ்வளவு எளிமையாக உன்னை
காதலித்துவிட்டேன்..என்பது தான்.
உனக்கொன்று என்றால்
உயிர் துடித்து
உறங்க மறுத்து
கோபம் அழைத்து
உன்னை கொட்டி தீர்க்க தயங்குவதில்லை.
ஆம், அவளின் குழந்தை மட்டும்
தானே தாயின் கூந்தல் இழுத்து,
முத்தம் இழைத்து
மார்ப்பில் முட்டி
மடியில் உறங்க முடியும்..
உரிமை எனது ஆகி
உள்ளூர உயிர் வேர் பிடித்துவிட்டாய்.
தென்னையாயின் வெட்டிவீசி 
விடலாம் என கஞ்சம் சிறிது.
என்னை அறியாமலே வாழை ஆகி
விட்டால்..
வெட்டி தீர்த்தாலும் வளர்ந்து நிற்பேனே.
இடுப்பு வலி தடுக்கி சென்றிட
இழர் மரமாய் இல்லாமல்
அயிர் கதிர் ஆனாயே 
அன்பில் அன்னைத் தோற்தாள் என
எண்ணம் இப்போதெல்லாம்..

Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்