அவளிடம்

எனக்கு தெரியும் தான், நதியில் விழும்
நிழவின் பின்பம் எல்லாம் வெளிச்சம் தருவதில்லை என்று.
ஆம் பின்பம் தான் எனினும் என்றும்
உன்னுடன் இருக்கதான் ஆசைப்படுக்கிறேன்.
எத்திசையிலும் நீ தானே இன்பமாய் இருக்கிறாய், எதிர் காற்றாக நீ என்னை
நீங்கி செல்வதால் தீராத வலி வந்து
தீயினுள் நான் ஏறுவதை என்னால் தடுக்க இயலுவதில்லை.
துன்பமென உன்னை நான் சொல்லாமல்
விடமாட்டேன். துன்பம் தான் 
என் வாழ்நாள் கண்ணீரில் கடலாக நீ மட்டும் தான் ஆயிருப்பாய். மற்றவை எல்லாம் ஓடை, குட்டைகள் தான்.
சொற்கடலும் நீ தான்.
மௌன அலையும் நீ தான்.
உன் தவறிய அழைப்பிற்கு நான் வருந்தாத நாள் இல்லை நான்.
என் அழைப்பிற்கு நீ பதில் அழிக்கவில்லை எனினும் அதே வருத்தம் இன்னும் ஆயிரம் மடங்கு. 
கண் பார்த்து கதைக்க உன்னிடம்
கவலை மறந்து செழித்து திருந்திறுக்கிறேன்.
கைக் கோர்த்த அந்த நிமிடம்
கருவறை பெற்றேன் என்றேன் அவளிடம்.
வேறு யாராடி எனக்கு என்று உனக்கு சொல்லி புரியவைக்க என் வாய்ப்பலம் தேவையில்லை.
உனக்கே அது தெரிந்திருக்கும்.
அயர் கதிர் சூரியன்
வெளிச்சம் தர மறுக்கையில்
தீக்குச்சி தீட்டி நான் இருக்கிறேன் என்றாயே..
நம்பிவிட்டேன். இருந்துவிடு.
இல்லையேல் இறக்க நேரிடலாம்.

Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்