கண்ணீரவள்

எதை எழுத, என்னவென்று எழுத
ஏக்கம் தருகிறாய்,
பாசம் தருகிறாய்,
கண்ணீர் தருகிறாய்,
கவிதைகள் தருகிறாய்,
கவலை தருகிறாய்,
உயர்விடும் தைரியம் தருகிறாய்.
இது தான் நீ என என்னால் முடிக்க இயலாது.

இமை மூட இரவுகளும்
இதயத்தில் கணக்கும் பொழுதுகளும்
நினைவுகள் நீந்தி செல்லும் நதி நானாய்;
பறவைப்போல் மீன் தேடி உள்ள செல்ல
படகின் மேல் வந்து வலையை விரிக்கிறாய்.

உண்ண இயலாத இன்பம் பயக்கும்
கண்கள் முன்வரும் குருஞ்செய்தி கண்டு
இடி தாங்கும் இதயம் கூட இமைப் பொழுது 
தாங்காது உன் உணர்வில்லாது.

யாராயினும் நீ விரும்பி பேச
அது நான் இல்லாது போகும் தருணம்
நரம்புகள் துடித்து நடுங்கி விழும்;
இங்கே பகலில்லாது இரவுகள் தொடரும்.

தனிமைத்தான் வாழ்வென்று
தடுக்கி தடுமாறும் நாட்கள் எங்கும்
படரந்து வந்த தொப்பில் கொடியும்
அறுந்து தானே போகும், அது நீயா.?

பழகி விட ஆசைத்தான்
சிறிது சிதறி விழவும் ஆசைத்தான்
மரணப்படுக்கையிலும் மறவாத நினைவோடு
மலர் வைக்கும் உன் கூந்தல் உதிர்வதைத் கூட
மறவேனே..


என் ஆசரியன் சொன்னது போல்
என் விழியோரம் வரும் நீர் துழியின் 
ஆழம் அறிந்தால்
அது போதும்.


#காதலர் தினம்.











Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்