கர்வம்

“உன் தேடலில் கிடைக்காதது என் தேடலில் கிடைத்தது வரமே💗" என கர்வம் கொண்டாள்.

என்னடி வரம் பெற்றாய்..,.?
என்னைப் போல் 
உன் கண்ணை ரசித்தாயா.?
ஏக்கம் கொண்டாயா.?
காலம் தாண்டி ஓடி,
கதவின் முன் வந்து நின்றாயா.?
கண்ணீர் விட்டாயா.?
காதல் கொண்டாயா.?
ரசிக்க பெற்றாயா.?
சிதைந்து விழுந்துதாயா.?
சிரித்து மகிழ்நதாயா.?
கலைந்து கொண்டாயா.?
கட்டிலில் பிரண்டாயா.?
தூக்கம் இழந்தாயா.?
துக்கம் அடைந்தாயா.?
பறந்து சென்றாயா.?
படகாய் மிதந்தாயா.?
பசலை கொண்டாயா.?
பாடி உடைந்தாயா.?
தாடி வளர்த்தாயா.?
தடுமாறி விழுந்தாயா..?
உடல் இழைத்தாயா..?
உயிர் இழந்தாயா..?

இப்படியெல்லாம் சொல்லி மோத ஆசைத்தான்.
எனினும் அவள் கர்வத்தையும் 
ரசித்து கடந்துவிடுகிறேன்.




Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்