பூங்கதவே தாழ்திறவாய்
கேளாய் பூமனமே,
கேட்டறிவாய் என் உயிரே
தாராய் பார்வை எனும்
தள்ளிச் செல்லாதே என் உறவே
வார்த்தைகள் முடியும் முன்னே
உன் மௌனங்கள்
மொழி எழுதும்,
கண் என நினைக்காதே:
அவை என் கல்லறையில் பூவாகும்,
நினைத்து விழித்திடவா
நிழல் போல் அணைத்திடவா
காதல் என்று சொன்னால்
கருவறைக் கொடுத்திடவா
வேண்டாம் என பதிலளித்தால்
விரும்பும் வரை வழி வரவா..
காமமும் வேண்டும் தானே
காலை வரை இணைந்திடவா,
தாக்கும் பொழுது போக
தாங்கி உன்னை சாய்ந்திடவா..
பதில் என்ன நான் அறிய
பூங்கதவே தாழ்திறவாய்..!
Comments
Post a Comment