மீயழகி.
முன்பனித்தான் போலும்
முதுகின் மேல் ஏறி நிற்க,
வீண்மீன்கள் வீட்டின்
கதவை தட்டினவாம்,
காற்றைக்கூட விடவில்லை
அவள் இருந்த இடமென
நிலவிக்கிங்கு
வேலையினியில்லை.
காரணிகள் என்ன தேவை.?
காற்றாய் பறக்க நெஞ்சம் இங்கே.
கால்கள் தரையில் இல்லை,
மீயழகி அவள் என்ன செய்தாள்.?
மீறும் இன்பம் கொள்கிறேனே
மிதக்கும் போதைமரம் நான்.
உறங்கி விட முடியவில்லையே
கள்ளி கண்களிலே நீற்கினறாளே.
உணவுதான் வேண்டாம் என்றால், உயிரினுள் பாயிக்கின்றாளே.
சற்று தலைச்சாய்த்தால்
சாலனமில்லாமல்
கொள்வாள் போலும்
உன் வீட்டின் முன் கோலங்கள் எதற்குடி உன் அன்னையிடம் சொல் என் கண்ணங்குழிகள் போதுமென.
காணங்குயில் மொழியழகி
காதினிலே ஒலி எழுப்பி
என்னை காந்தம் போல் இழுக்கிறாளே
பெயரறிந்த விழியகழி
பார்வை போதாதென்று
என்னை வேர்க்க வைத்து
தாக்குகிறாளே.
ஒதுங்கி மட்டும் சென்று விடாதே
உயிர் தாங்கதாக துயரம்
நேரும்;
என்னை நீயும் மறக்கும்
போது அதுவே நான் உயிர் போகும் நேரம்.
கற்றுக் கொடுக்கவே
ப்ரியப் பட்டவனாயினும்
உன்னிடம்
மட்டுமே
கற்றுக் கொள்ள
ப்ரியப் படுகிறேன்....❤️❤️
Comments
Post a Comment