கருவறை நீ
மூவிரண்டு கம்பி சன்னல்
மூச்சை நிறுத்தும் தாரகை மின்னல்,
இரூயிர் இழக்க வழிச்செய்ய
இன்னும் கொஞ்சம் அதை திறந்தால் என்ன..?
காதணி தெரியும்
கழுத்தின் மெய்யழகு புரியும்
வேதனை என்ன வென்றால்
வெட்கம் வந்து துலையும்
பாராத நொடி என்னைப்
பார்த்து நீ சென்று விட்டால்
தீராத ஆசைக்கூட
தித்திக்க கடந்து செல்லும்
தீயடி நீ
தெரியுமா உனக்கு.?
எறிவது நான் தானே
உன் பார்வைத்தான் பொறுப்பு.
எத்தனை பிழை என்னில்
நீ தான் திருத்தி செல்ல
கற்றவை அனைத்தும் வீண் என
காதோரம் சொல்கிறாய் மெல்ல
நானல் சாயும் நழிந்து
குழந்தையாய் நானும் மெழிந்து
உன் கைவிரல் பிடித்திட போதும்
வேறு என்ன வேண்டும்
என் நாட்கள் போதும்
உன் கம்பல் சினுங்கி ஆட
சிறு கூந்தல் அதை நீ எடுத்து மூட
சமையல் செய்யும் பொழுது கூட
என் சவங்கள் ஆடுவதென்ன.
கண் பார்க்க அந்த நிமிடம்
கவலை கரையும் இந்த இடம்
உயிர் உரையும் அது வேறு கதை,
உண்மையில் வேறு யாரடி தேவதை..?
வந்து நின்று பேசிவிட்டால்
வரம் தானே வேறு என்ன
கை அசைத்த போதுதான் தெரியும்
நிலவும் பேருந்தில் பயணிக்குமென,
காரணிகள் தேட வில்லை
கண்களை பார்த்து நிற்க
கல்லறையிலும் எழுதி வைப்பேன்,
எனக்கு மட்டும் இரு கருவறை என.
Comments
Post a Comment