முட்டாள்

வாடா, போடா
என்று எத்தனையோ பேர்
நம்மை அழைப்பதுண்டு.
எதிலும் காணாத ஆனந்தம்
அவள் அறியாமல் அழைத்த
அழகில் அடைந்திருக்கிறேன்.

முட்டாள் என்று சொன்னால் யாருக்கு தான் கோபம் வராது.
முடித்து விட்டாள் விடுக்கதையை.
அவள் அழைத்த போது தான்
புரிந்து கொண்டேன்
முட்டாள் என்பது எவ்வளவு இனிமையான சொல் என்று.





Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்