விட்டொழி
அவளுக்கு யாருமில்லை
அவளுக்கு நான்தான் இருக்கிறேன்
நான் இல்லையென்றால் அவள் என்னாவாள்
அதனால்தான்
எல்லா கோபமும் மறந்து
அவளிடம் மீண்டும் மீண்டும் போய் நிற்கிறேன் என்றேன் நண்பனிடம்.
இல்லை நண்பா
உன் கற்பனையை விட்டொழி.
நிஜமாய்
உனக்குத்தான் யாருமில்லை
என்றான்.
#யாத்திரி.
Comments
Post a Comment