என்னழகி
கண்ணுக்கு முன் நிற்பாள்
எதையும் என்னிடம் கதைக்க மாட்டாள்
சிறிது பக்கம் வந்து
சில பார்வைகள் தூவி செல்வாள்
நிலவை விடுங்கள்
அவள் கர்வமழிந்து காணமல் போய்விட்டாள்,
என்னவள் கண்ணிடம் மோதி
வெல்ல முடியும் என்று சொன்ன
ஒருவரைக் கண்டதில்லை.
ஒரு கதைச் சொல்கிறேன் கேழுங்கள்.
காலை நான்கு மணி இருக்கும்
யாரோ கதவை தட்டும் ஓசை கேட்க
இந்த நேரம் யார் என்று திறந்து பார்த்தேன்.
இரு உருவம் வந்து சந்திரன், சூரியன்
என அறிமுகபடுத்தி கொண்டன.
சந்திரன் முதலில் முந்தி அவளைக்
காலையில் மட்டும் வெளியே வரச்சொல்
அந்த சூரியனாவது வயிரெரிந்து கொண்டு
தாங்கி கொள்ளட்டும் என்றது.
மூஞ்சை சுளித்து நீ கொஞ்சம் நிறுத்தையா..
இரவில் மட்டும் அவளை வரச்சொல்லுங்கள்
சந்திரன் தேய்ந்து சாமாளித்து கொள்ளட்டும்
என்றது.
இருக்கதையும் கேட்டு,
காலையில் மட்டும் பார்க்கும் உனக்கும்
இரவில் மட்டும் பார்க்கும் உனக்கும்
இவ்வாறு உடல் இழைக்கிறதே.
காலையும், இரவும் பார்க்கும் என்னை
யாராவது நினைத்து பார்த்தீர்களா என்றேன்.
இருவருக்கும் பரிதாபம் வளர்ந்தது.
அவள் எனக்கே பாவம் பார்ப்பதில்லை
உங்களை நான் எப்படி பரிசிலனை செய்வேன்
என்று ஆறுதல் உரைத்து அனுப்பி வைத்தனேன்.
Comments
Post a Comment