கவிதையானவள்
கவிஞர்கள் தினமாம்
நீ என்ன எழுதப் போகிறாய் என்று கேட்டாள்.
என்னவென்று சொல்ல,
உன் முள்ளுருப் பார்வையில்
என் முதுகெலும்பு உடையும் அதை எழுதவா..?
கண்ணீல் நீ வைக்கும் மைப்போல்
என் கரங்கள் கரையும் அதை எழுதவா...?
சின்னச்சிறு பேச்சால்
என் செவி நனையும் அதை எழுதவா..?
சில நேரம் எனை மறுத்து போக
சிதைந்து விழுந்து இதயம் கருகும் அதை எழுதவா..?
மின்மினிப் போல் உதடு சினுங்க
மின்னல் கோடி என் வாசல் தட்டும் அதை
எழுதவா..?
கண்ணின் ஓரம் சிறு கரை படும் அதன்
காரணியின் விதை எழுதவா..?
உன் காதணி மேல் தீராத கோபம்
கண்ணம் படும் அந்த உரை எழுதவா..?
காலணி போல் கீழ்க்கடக்க ஆசை
வரம் தருவாயா.? என கடிதம் எழுதவா..?
காணாத கோலம் போல் புன்னகை,
புயல் வீசும் என்னுள் நுவல் எழுதவா..?
பாவமடி வானவில், உன் கூந்தல் நிறமில்லை
அவளிடம், பொறாமைக் கொண்டாள்
புகல் எழுதவா..?
பஞ்சம் பிழைக்க வந்தவள் நிலா
இரவில் வெளியில் வாராதே!
பட்டு தெய்ந்து விடுவாளென பறை எழுதவா..?
பார்க்காமல் நீ சென்று விட்டால்
பதறி நிற்கிறேனே பயந்து நானும் கூறு எழுதவா..?
பனிப்படும் இழயாய் பணிந்து
போகிறேனே உன் பேச்சை கேட்டாள்
பாசம் காட்டு என்று உயில் எழுதவா..?
என் கனவினுள் வருகிறாய்
நினைவினுள் கரைக்கிறாய்
மொழியில்லை என்னிடம் என்ற அணி எழுதவா..?
ஏக்கங்கள் ஆயிரம்
எதினினும் நீதான் நிஜம்
கூறுப் போட்டு கொல்கிறாய்
உண்மை எழுதவா..?
என்னவளே,
எந்த கவிஞனாயினும்
கவிதையே கவிதைக் கேட்டாள்
கை நடுங்குவான். உண்மை எழுதிவிட்டேன்.
Comments
Post a Comment