நிலவு
ஆறுதல் ஆயிரம் சொல்லிவிட்டேன்
நிலவிற்கு,
தேறுவது போல் தெரியவில்லை,
தேம்பிகிறாள்.
எல்லாம் உன்னால் தான்..
உன்னை யார் வரச்சொன்னார் இரவில்..?
நீ பழகில் வருவதின் வயிரெறிச்சால்
தாங்காமல் தான் சூரியன் எறிகிறான்
என்னால் அது கூட முடியாதே
என புலம்பிக் கொட்டிகிறாள்
என்னிடம்.
வழியின்றி தட்டி விடுகிறேன் அவளுக்கு.
தேய்ந்து விடுகிறாள் சில நேரம்,
காணாமல் போவதும் உண்டு.
கடிதம் எழுதி கொண்டிருக்கிறாள்
உனக்கு, விரைவில் வெளியேறிகிறாளாம்
வானில் நீ வந்து குடி எறும் நாளை
வீண் மீன்கள் கொண்டாட உள்ளதாம்.
பொறுத்து கொள் சில நாள் தான்
அவள் சென்றுவிடுவாள்;
என்ன இருந்தாலும் அவள் நிலா ஆயிற்றே
சிறிது வலிக்க தான் செய்கிறது எனக்கு.
இப்படிக்கு,
நிலவின் ரசி.
Comments
Post a Comment