மீனடி நீ

சாலையில் நடக்கும் போது
கைப்பிடித்து செல்ல துடித்தேன், முடியவில்லை.

கரங்கள் வைத்து நீ
பனியினை உருக்க
உஷ்னம் தாங்காமல் 
உதடினில் வழிவதை எடுத்து
துடைக்க ஏக்கம் கொண்டேன்
முடியவில்லை

கண்களைப் பார்க்க
கடவுளிடம் வேண்ட
கண்ணதாசனை தள்ளி
கவிதை எப்படி !என்று
உன் தந்தையிடம் கேட்க ஆசை 
முடியவில்லை

உயிரை உரிஞ்சம்
உதட்டோடு சிரிப்பும்
உடலை உரசி
இருக்கமான பிடியும்
இருந்தால் என்னென்று நினைத்தேன்
முடியவில்லை

காதலென்று சொல்லி அம்பெய்த
ஆசையுண்டு, ஆனால்
உவரியில் திளைத்தாலும்
உப்புச் சேராத மீனடி நீ
அஃது உன்தன் பிழையல்ல
என்தன் உயிரின் நிலை.



Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்