அவள்❤️

அவள் இவ்வளவு வலிகளைத் தாங்குகிறாள்
என்பதே எனக்கு பெரும் வலிகளைத் தருகிறது. உனக்கு காதல் இருக்க வேண்டும்
அது எனக்கு தீராத வலியைத் தரும் என்று 
முன்பே எனக்கு தெரியும். ஆனால் நீயும் என்
போல் கடலில் தத்தளிக்கும் கட்டுமரமாக
இருப்பது என்னடி நியாயம்.?
இதையெல்லாம் தாங்கும் இதயமாடி உனது.
இமை இடை வளராத குழந்தையடி நீ,
இன்பம் காண்பாள் என இத்தனை நாள்
பீத்தி கொண்டிருந்தேனே. என்னிடம் சொல்ல
என்ன தயக்கம் உனக்கு.எதிலும் சுவையாய்
தெரிந்தாய், என் வானில் நிலவாய் தெரிந்தாய், கவிதை வரைந்தேன், கண்ணீர் விட்டேன், ஏக்கம் கொண்டேன், சாக திணிந்தேன், சாட்டை எடுத்து அடித்து கொண்டேன், எதிலும் நீ என எண்ணம் கொண்டேன். இருப்பினும் நான் அறிந்திருந்தேன், என்னைப் போல் நீ உணரவில்லை என்று. ஆனால் என்னைப்
போல் தான் நீயும் என்பது சாபமாய்
தெரிகிறது எனக்கு. கடவுளிடம் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை எனக்கு, வேண்டி கொள்கிறேன் நிச்சயம் உன் ஆசை கரைச் சேரட்டும். உன்னை என்னால் இப்படி காண
இயலுவது இல்லை. கட்டி அணைத்து அழுகாதே கண்ணீர் துடைக்க நான் உண்டு என கூற ஆசையிருப்பினும் நீயே தடுக்கிறாய்.
புரிகிறது காரணிகள்.கதைகள் எல்லாம் உன்
கைச் சேரும் நம்பி வாழடி.காதல் ஒரு நாள் கைக்கூடும், சாகாது பாராடி.
என் காதல் பற்றி கவலைக் கொள்ளாதே.
அது குருடனின் கனவு, செவுடனின் இசை.
புரியாத புதிராக தான் அதை நானும் உணர்கிறேன். யாரோ மேல் நாம் அன்பு செலுத்தும் போது, அவர்கள் வேறு யாரோ மேல் அன்பு செலுத்துவது தீராத தீயினுள்ளே
தாவி குதிப்பது தானே. ஆம், அறிந்தே குதித்தேன், எரிக்கிறேன் பராவாயில்லை.
என்னை புதையல் என்பதும், நேற்று நாள்
கண்டு கொள்வதில்லை என்பதும் 
உள்ளுர திகட்டி அழுகிறேன். என்னால் உன்னிடம் பொய் உரைக்க முடியவில்லை.
உண்மையை மறைக்கவும் முடிவதில்லை.
என்னடி செய்ய நான்.?
அழுது பழகியவன் நான், ஒன்னும்
புதிதல்ல எனக்கு, ஆனால் நீ
அடி வேரில்லாத நானல் புல்
சோகம் தாங்குவது சுமை தானே.
தீராத காதல் உன்மேல்
மோதாத மோகம் உன்மேல்
எட்டி பார்ப்பதை தடுக்க என்னிடம் வழியில்லை.
செய்வதறியாது நிற்கிறேன்.
தாய், தந்தை, அன்பு, ஆசை, கோபம்,பிரயசகி,
காதலி, என அனைத்தும் நீதானே.
உன்னை விட எனக்கு மனதில்லை.
புத்தனில்லை நான்
ஆனால் உன்னால் அதற்கும் முயல்கிறேன்.
கவலைப்படாதே நிச்சயம் உன் ஆசை கைக்கூடும். 
கைக்கூட வைப்பேன்.
நான் இருக்கிறேன்.
உன் காதல் பிழைக்கும் நான் இருக்கும்வரை.




Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்