நீ
துன்பம் நான் பிறந்தப் போதிலும்
தொப்பில் கொடி அறுக்கையில்
துடித்து எனக்கு வலிக்குமென்று
அலறும் என் அன்னை நீ,
முதுகின் மேல் என்னை சுமந்த
மூச்சை தரும் என்னை தந்தை நீ
தூரத்தில் வானம்
துயரத்தில் நான்
சோகங்கள் சூளும் போது
என்னை தனிக்கும் மழை மேகம் நீ.
தொட்டிலிட்டவள் வீதியில்
கட்டிலில் செல்லும் போது
என்னுடன் இருந்த வலிதான் நீ
துலைந்தேன் என்று நினைத்தப்போது
தூக்கு கயிறை பிடுங்கி வீசிய
வளர்ப்பு தாய் நீ.
நான் தூங்கும் போது என் கண்ணீர் நீ
எழுகையில் என் புத்தகம் நீ.
பத்தாம் வகுப்பில் அப்பாவின்
பாக்டில் திருடிய
பானிப்பூரியின் பத்து ரூபாய் நீ.
பன்னிரெண்டில் படியிலிருந்து
என்னை நோட்டமிடும் பாக்யா
எனும் என் பட்டப்பெயர் நீ.
விடைத்தாளில் தெரிந்தே நான்
எழுதிய பிழை நீ
விடைபப்பெறும் போதும்
நணபன் பகிர்ந்த தொலைப்பேசி எ(ண்) நீ.
ஆழியில் எனுக்கு மட்டும் கிடைக்கும்
முத்து நீ
அழிகில் நிலவின் வெளிச்சம் நீ
முதல் முதலில் மிதிவண்டி ஓட்டி
விழும்போது முட்டி மேல் எழுந்த தழும்பு நீ
முத்தம் தர கிட்ட வருகையில்
முஞ்சைத் திருப்பும் குழந்தை நீ
வெட்டி கதைப் பேசும் போது என்
பாட்டி சொல்லும் குட்டி கதை நீ
மட்டைத் தூக்கி தொட்டு விளையாடையில்
நான் பெற்ற முதல் வெற்றி நீ
பாதி உயிர் எடுத்து சென்று
பரவலாய் கலக்கும் சிந்து நதி நீ
பட்டம் பெற்ற பின்னே
பறவாய் ஆன என் சிறகு நீ
காதலில் மோதி என் கைகள் எழுதிய
கவிதைகள் நீ
காணும் பொங்கலின் களிச்சோறு நீ
தவணி உடுத்திய வெக்கம் நீ
தாவரத்தின் சத்தம் நீ
கண் தெரியாதவரின் பார்வை நீ
காது கேளாதவரின் பாடல் நீ
கண்ணீர் துடைக்கும் என்
பாச கை நீ
காலையில் நான் பார்க்கும் பூத்த மலர் நீ
காகிதம் நீ
என் கதைகள் நீ
இன்பம் தந்த சொந்தம் நீ
கோயினிளுள் என் தெய்வம் நீ
கோப்பத்தின் கெட்ட வார்த்தை நீ
நீ தூக்கி வளர்க்கும் துயரம் நான்
என் தூண்டிலின் தவளை நீ.
கட்டையில் என்னை எற்றும் போதும்
கடைசியில் நான் பார்க்கும் முகம் நீ
காற்றை என்னை எறிக்கும் தீயும் நீ
விளகி விட்டால்
நான் அடையும் சொர்க்கம் நீ
சேர்ந்து விட்டால்
நீ அடையும் நரகம் நான்.
Comments
Post a Comment