சண்முகா ரெடிமெட்ஸ்
“ஏத்தி ரெண்டு கிலோ சேத்து கொடுவே..
காசாண்டி வாங்கிக்கோ.."வஞ்சம் வேணவே,
என்று இரும்பி கிளரினாள் கிழவி. இத, இதுப்பாரு பாட்டி இந்த முற இல்ல, “நான் எந்த வஞ்சமும் செய்யல, இருந்த உனக்கு இல்லாண்டியா..மூட்ட இல்ல கிழவி, அடுத்த முற தாரேன், அந்த சின்ன கடலையாண்டாம்
அப்புறவ பையக் கொடுத்து விடு" , என்று சொன்னார், ரெஷன் கடையாளர். சேரி மவளே.. கொஞ்சம் இருந்த கூட போட்டு வையும் அவன அனுப்புவேனாக்கும். யா, வாரேன் என்று தன் முட்டி செத்த காலுடன்
முடியாமல் அடிகளை நகர்த்தினாள் அவள்.
கிழவி பெயர் தேனழகி..ஆம் தேனைவிட
அழகி தான். ஒரு முறை சோமு கிழவியிடம் கேட்டதுண்டு வண்டுதான கிழவி அழகு, அது என்ன தேனு , தேனழகினு உனக்கு எவன் பேரு வெச்சான்...? வெட்கம் அந்த பல்லழிழந்த
பவடு முகதை அடையும் போது மிரலன் சொன்னான், எடே நீ மூடுல சொம்பு., கிழவி உண்மையாவே தேனு தான்ல..அங்க பாருவே எப்படி வடியுது அழகு...என்று நாவரும் சிரிக்க,
தேன்தான் அதிகம் வடிந்தது. எமே, அது என் வீட்டாரு வேச்சதுவே. என் மாமால அவரு, தேனுனா அவருக்கு அம்புட்டு இஷ்டம்
நான் புறந்தச்ச சொன்னாராம தேனு பேரு வையு, நான் ஆசைய கூப்பிடவேனு..அப்ப வைச்சதுடே, இந்த பேரு. “ஆமாம் கிழவி, நீ தேனுதான் நான்தான் கதைத்தகிரேனுல" என்றான் மிரலன்.கிழவியின் உடம்பில் இல்லாத நோய் இல்லை, எழுத்துகளால் இணைக்க இயலாத, வாயில் நுழையாத
பெயரிட்ட நோய்களுக்கும் இவள் தான் இருப்பிடம். எனினும் அவள் அதையும் கண்டுக்கொள்வதில்லை.
அந்த தேனின் கூட்டில் ராமு,மிரலன்,சின்ன கடலையும் தான் உறவுகள். கிழவியின் கணவர் இறந்தவுடனே மூன்று நாட்கள் கூட பொறுக்காது, எனக்கு நீ தொந்தரவு, பாரம்,
எங்கையாவது பொய்டு என்று தன் மகனே சொல்லிவிட்டான் என்ற போது உலகே மாயம் ஆகி கூட்டினைக் கட்ட ஆரம்பித்து இன்றோடு பதினைந்து ஆண்டுகள் சேர்ந்துவிட்டன.தொலந்தது போ என்று நினைத்துவிட்டான் மகன், ஒருமுறையும் இவளும் அங்கே செல்லவில்லை, அவனும் இங்கே வரவில்லை என்று சொல்லி எப்போதாவது அவள் அழுவாள். எட்டு கற்கள் எண்ணி வைத்த உயரம் தான் இருக்கும் இவள் வீடு, ஆங்காஙகே வெளிச்சம் வருவதற்கு ஏதுவாக கூரையே தன்னுள் துளைகளை அமைத்து கொண்டது போலும். ஆம் இரவில் நட்சத்திரமும் தெரியும். ஓடையில் இருந்து உருட்டி வந்த கல்லைத் தானே கொத்தி கொத்தி ஆட்டம்கல் ஆக்கி
வீட்டின் முன்புறம் வாசலில் தெற்கில் இருக்கும். தெருவில் வாடகை இருக்கும் குட்டையன் என்ற நாய் திருடி வரும் செருப்புகள் அம்மி பக்கத்தில் அரவணைக்கப்பட்டு இருக்கும். அதில் கையில் கிடைக்கும் இரண்டை எடுத்து போட்டு நடையைக்கட்டுவாள் கிழவி. ராமுவும் குட்டையினிடம் கடன் பட்டவன்தான். ஜோடியாக இல்லை என்ற கவலை எப்போதும் யாருக்கும் வந்ததில்லை. ராமு,சின்ன கடலை, மிரலன் மூவரும் கல்லூரி படிப்பிற்காக
இங்கே தஞ்சம் புகுந்தவர்கள் தமிழ் படிப்பு, நான்கு ஆண்டுகளில் ஆறு மாதம் மாலை கடந்தது போல் கடந்தது. ஆறு மாதத்தில் கிழவி மேல் அன்பு செலுத்துவது அதிகம் யாரென்ற போட்டி போல் பாசம் பொலிந்து கொட்டினர் மூவரும். எதிர் வீடு கிழவி.முதல் மாத வாடகையே கொடுக்க இயலாத நில வரும் போது, கொழம்பும் எப்போதாவது கறியும் கொடுக்கும் அந்த கிழவி தான்
ஊரே வேடிக்கைப் பார்த்த போது கொடுத்து அன்பு செலுத்தினாள். மாமன் இடையாளராக
அரசு அலுவலகத்தில் வேலைச் செய்தவர். பசி, பட்டனி என்றால் என்னவென்று தெரியாமல்
இருந்த இந்த மேனி பென்சன் பணம் போராடி வாங்கும் வரையிலான மூன்று ஆண்டுகளில்
பழகாத பஞ்சம் இல்லை. அருகம்புல் தான் என் மூழு நேர உணவு என அவள் சொல்லும் போதெல்லாம் மூவரும் கண்ணீர் விடுவர்.
படிக்காத, ஏதும் தெரியாத எளிமை வாய்ந்தவள் கிழவி, மூன்று ஆண்டுகளில்
உலகை உள்ளத்தில் அடக்கினாள்.
பென்சன் பணம் போதும் என்று சொல்லும் அளவில் இல்லாது என்ற போது புகையிலை மடித்து, பீடி சுற்றி கம்பெனிக்கு அனுப்புவாள்.
இப்போதும் அதே. கிழவிக்கு மூவரும் தான் பிள்ளைகள், முப்பொழுதெல்லாம் வீட்டில் வாடகைக்கு குடும்பங்கள் இருந்தமையால் ஏதும் பெரிதாக வரவு இல்லை பாட்டிக்கு பாசம் காட்ட, என்று அவளே இவர்களிடம் சொல்லுவது உண்டு.
ராமுவிற்கு அம்மா இல்லை. அப்பாத்தான் அவன் உலகம், வீட்டின் ஒரே பிள்ளை. அப்பாவும் குடிக்காரர் ஆயினும், அவர் செய்யும் தொழிழுக்கு அது வேண்டும் தான் என்று ராமு நன்கு அறிந்திருந்தான். அவர் அப்பா வெட்டியான் வேலை செய்தவர்.
வீட்டில் வறுமை கட்டில் போட்டு உறங்கி கொண்டு இருந்தாலும், மாதம் இருநூறு குறையாமல் அப்பா அனுப்பி வைப்பதுண்டு.
வாடகை அதில் நூற்றிஐம்பது போக ஐம்பதில் தான் ராமு வாழ வேண்டும். சின்ன கடலையும்
மிரலனும் ஓர் ஊர் காரர்கள். வாழ்நாள் சிநேகிதர்கள். இருவரும் வறுமையில் வாடினாலும் எந்நேரமும் சந்தோஷம் இருக்கும் இருவரிடத்து. ராமுவின் வறுமைக்கும் இந்த இருவர் வருமைக்கும் இருவது ரூபாய் வித்தியாசம். ஆம். இங்கே மாதம் இருநூற்றி இருபது வந்து சேரும்.
கிழவி வரும்வரை மூவரும் மூன்று வேலை உண்டதே இல்லை. அரிசி வாங்க காசு இல்லை இன்று இருக்காது என்று காலெண்டர் பாத்து கணக்கு போடப்படும்.
பத்து கிலோ அரிசியின் விலை இருபது ரூபாய் என்ற நிலைதான். ஒருநாளைக்கு குறைந்த பட்சம் ஒரு கிலோ என்று ராமு கணக்கெழுத பத்தாம் நாள் முடியும். எனவே மத்யம் உணவை தவிர்த்தால் ஐந்து நாட்கள் அதிகம் உண்ணலாம். ஆம்..என்று இருபது கிலோவாக வாங்கினால் என்ன.? என்று கடலை கேட்கையில் காலேஜ் பீசு உங்கொப்பன் தருவானா என்று தான் கேட்டான் மிரலன். வாழ்க்கை கணக்கை நம்பி தான் இருந்தது. எனவே மீண்டும் ஒரு வேளை உணவு குறைக்கப்பட்டு மீண்டும் ஐந்து நாட்கள் கூட்டப்பட்டன. பத்து தாள் தான். ஒருநாளைக்கு ஒருமுறை உண்போம், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை விடுப்பு எனக்கு என்று எப்போதும் சமைக்கும் கடலைச் சொல்ல மூவரும் சிரித்தது ஆம் என்றது போல் தான் இருந்தது. முதல் மாதம் கணக்கு தப்பவில்லை.
கிழவி தீடீர் என்று இந்தவே, குழம்பு அரிசி பொங்கி சாப்பிடுக்கோ, என்று ராமுவிடம்
கொடுத்த போது உண்மையில் மூவரும்
குழம்பை மட்டும் உண்டு தான் படுத்தனர்.
அவள் குழம்பு கூட்டு கொடுக்கும் நாள் எப்போதும் இங்கு அரிசி பொங்கி இருக்காது.
ராமு தான் சொல்லுவான், கிழவி எதோ தெரிஞ்சி இருக்கு, மனம் நாம எப்பெல்லாம் ஏதும் சாப்பிடலையோ அப்பெல்லாம் ஏதாவது தார பாருவே..நல்ல இருப்பால என்று சொல்ல.
கடலை பழைய குழம்பு கூட இல்லடா இப்ப வடிச்சி எடுத்து இருக்கா, ருசி எங்கூரு பத்தாதுல எழுதி தர..அவ கைக்கு எங்க ஆத்தங்கரையோரம் சுடல சாமி இருக்கு, அவன் கிட்ட சொல்ரேன், இவ இன்னும் நூறு வருஷம் இருக்கனும்னு என்றான்.
கிழவி வந்தவுடன் கணக்கு தப்பியது.
இப்போதெல்லாம் மூன்று வேலேயும் உண்ணுவது நடைமுறைக்கு வந்தது.வெளியே உண்கிறோம் என்று சக நண்பர்களிடம் பொய் சொல்லிவிட்டு கல்லூரி இருக்கும் தெருவை ஒரு சுற்று சுற்றி விட்டு, மூவரும் என்ன உண்டீர்கள் என்று கேட்டால் ஒரே போல் பதில் சொல்ல பேசி வைத்துவிட்டு உள்ளே சென்ற பொய்களும் மாறிவிட்டனர்.
கிழவி வாங்கி தந்த நான்கடுக்கு திண்டி கூடு, அதில் தேனு என அச்சடிக்க சொன்னதும் மிரலன் தான். மதியம் ருசிக்கு சக நண்பர்கள் அடித்து கொண்டு இவர்கள் உணவை உண்பார்கள்.
கிழவி தான் எல்லாம் இவர்களுக்கு, அவளுக்கும் வறுமை இருந்தாலும் எப்போதும் இவர்களிடம் அவள் காட்டியது இல்லை, தான் இந்தனை யாண்டு சேர்த்து வதைத்த மடிப்பு பணத்தையெல்லாம் வாரி கொடுத்து செலவிட்டாள் இவள். ஆறு மாதத்தில் கருவறையில் இருந்து உதைக்கும் குழந்தையை ரசிப்பது போல, மூவரையும் சுமந்து ரசித்தாள். கிழவிக்கு கதைச் சொல்வதில் ப்ரியம். மூவரும் அவள் சொல்லும் வெவ்வேறு கதைகளை கண்சிமிட்டாமல் பார்த்து கேட்டு ரசிப்பார்கள்.
ஒருமுறை கறி வைத்து உணவு சமைத்து இழையிட்டு இவர்களுக்கு உணவளைக்கையில் சின்ன கடலை கேட்டும்
அவள் உணமையைச் சொல்லாமல் தவிர்த்துவிட்டாள். தனக்கு பேத்தி பிறந்திருக்கிறாள் அவளுக்கு “ப்ரியா" என
பெயரிடப்பட்டிருக்கிறது என்பதை மூன்றாண்டுகள் கழித்து எங்கோ யாரோ சொல்லி வந்து சேர்ந்திருக்கிறது இவளிடம்.
அதற்கு தான் இந்த விருந்து.
ரேஷன் கடையில் பையை முன்னாலே கொடுத்து விட்டு வந்துவிடுவாள் கிழவி, அப்போது தான் அரிசி அதிகம் கிடைக்கும்,
இப்போது தேவை அதிகமாக, அதையும் சரிக்கட்ட அந்த கடையாளரிடம் இருபது பையில் சுருட்டி வைத்து வருவாள். குறைந்த பட்சம் ஐம்பது கிலோ கிடைக்கும். அதை மூவரும் கைமாத்தி சுமந்து வந்து சேர்த்துவிடுவார்கள். கல்லூரி கடன் சுமையைகள் இப்போது மூவரிடமும் இல்லை.
கையில் பணம் இல்லை, கிழவி வாங்குவதும் இல்லை. அந்த அரிசி பையை ஒருமுறை சின்னக்கடலை கொண்டு கொடுக்கையில்,
செல்லும் நதியோரம் பாம்பை வைத்து ஒருவன் வேடிக்கை காட்டுவதை பார்த்து நின்று விட்டவன் பையைத் தொலைத்துவிட்டான். சரி பைத்தானே
என்று திரும்பி சென்று கிழவியிடம் சொல்லுகையில் கிழவி கோபத்தில் அவனை அடித்தே விட்டாள். சின்ன கடலைக்கு புரிவதில்லை, “நீரு ராமு அன்னக்கா பத்து ரூபா தொலச்ச போதும் உண்ணும் வையல,
உனக்கு அவன் மேல தான் பாசம், போகும்.. நான் இனி வரமாட்டேன்" என்று தாயுடன் கோபம் கொண்டு சென்றான்.
நடந்ததை அறிந்து இருவரும் வர, கிழவி சொன்னாள், அது எம் மாமன் நான் வைசுக்கு வந்த போது சண்முகா ரெடிமெட்ஸ்ல சுடிதார் வாங்கி தந்த பையுவே, சுடிதார் இல்ல, அத அவர் நினைவ பல வருஷமா வச்சியிருக்க..
முதல அத அந்த ரெஷன் கட காரியிடம் தர மாட்டேன்..இப்ப தான் ஐம்பது கிலோ வாங்கரோம் பெரிய பையினு தந்த இவ தொலச்சிட்டான் என்றாள் கிழவி.
உடனே மூவரும் அதை தேடி செல்ல
எப்படியோ கண்டறிந்து ரேஷன் கடையில் சொல்லி கொடுத்து வந்தனர். அதில் கடலை அரிசி தொலஞ்சாலும் பரவாயில்ல ,
பையு முக்கியம் என்று குறிப்பிட்டான்.
நாட்கள் கழிந்தன..
தீடீர் என்று ஒருநாள் கிழவி காணாமல் போக,
எங்கே என்று மூவரும் தேட, இந்த மாறி ஆஸ்பத்திரியில சேர்த்து இருக்காங்க பஞ்சாயத்து காரங்க என்றவுடன், பதரி யடித்து ஓடினர் மூவரும். அவள் மூச்சை பிடித்து மூவவரை மட்டும் பார்க்க இருக்கவில்லை என்பது, அவள் தன் மகனையும் பார்க்க வேண்டும் என்று மூவரிடம் சொல்லும் போதுதான் புரிந்தது. மூவரும் தேடி திரிந்தும்
ஏதும் ஆகவில்லை. எப்படியோ யாரோ எங்கோ சொல்லி மகன் பிள்ளை வந்து சேரும் மணி நேரம் முன்னர் அவள் பார்க்க விரும்பவில்லை என்று தான் நினைத்திருப்பாள்
என்றார் அவள் மகன். மூவரும் கண்ணீர் கொட்டி மார்ப்பு தட்டி அழுது தீர்த்தனர்.
கையில் இருக்கும் காசை எண்ணி கிழவிக்கு ரோஜானா ரொம்ப பிடிக்கும்னு சொன்னவ,
அத வாங்க நூறு வேணும், என்று எடுத்து வைக்கையில் நாற்பது, நாற்பது, இருபது என்று இருந்த எல்லா பணமும் தீர இருபதை சரிக்கட்ட பதினெட்டு கிலோ மீட்டர் அலைந்து திரிந்து மாலை வாங்கி வந்தான் ராமு.
மூவரும் அவள் வீடு தேடி சுடுகாடு வரை
சேர்த்து வந்தனர்.
காலையில் உணவில்லை, அங்கே கிழவி இல்லை. கண்ணீர் துடைக்க, கல்லூரி செல்லும் வழியில், “ஏலே கடல, கிழவிய பையக் கொண்டு வரச் சொல்லு மூட்ட நாளைக்கு வருதாம் போட்டு வைக்கிறேன்"
என்றவுடன், தேனின்றி கூடு தேம்பி அழுதது.
Comments
Post a Comment