இலியாஸ்


என்றேனும் நான் 
செத்துப்போனதாய்
கேள்விப்பட்டால்,

ஓடிவந்து திகைத்து நிற்காதே... 

செத்து போனதை உறுதி செய்ய
இசிஜி எடுத்து பார்க்காதே..
நாடி பிடித்தும் பார்க்காதே... 

மாறாக,
அழுது கொண்டிருக்கும்
குடும்பத்தினருக்கு கேட்காதவாறு ...

என் காதருகே வந்து
ஒரு பயணம் போவோமா என கேள்...

நீ கேட்டும் பதில் இல்லை யென்றால்
அது மரணம்தான்...


_-மலையாள கவிஞர்_ _இலியாஸ்_

Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்