பாவம்
பெற்றக்கடனென்று நினைத்துவிட்டு
பிறப்பளித்து சென்றுதான்
யார் செய்த பாவம்.?
பின்னிரவில் கண்ணீரெல்லாம்
பழகிவிட்டு கருகும் நெஞ்சம் தான்
யான் பெற்ற சாபம்.
என் தீராத வலிகள் எல்லாம்
அவள் உள்ளளங்கை தாங்கும்,
உடல் உரசி அமரும் நீமிடம் தானே
பிறப்பாய் உணந்தேன் நானும்.
அமர வைத்து ஆசை காட்ட
அதில் மீசை பிள்ளையாய் நானும்
தலையை ஆட்ட,
மரணப்படுக்கையில் மறையுமா காதல்.?
உன் மடியில் சேராமல் முடியுமா என் தேடல்.
அரவணைத்து அழுகவெய்கிறாய்
சில சமயம், அழுக வெய்து அரவணைக்கிறாய்.
சொல், குரல் பூக்கள் நீடினாய்;
நீ தானே என் வண்ணத்துப்பூச்சியாய்
வாசம் தந்து சுவாசம் சேர்க்கிறாய்
வளையும் என் வான் நிலவு நீயாய்.
ஏனோ சொல்கிறேன்
கருவறை மட்டுமே தானே கொடுத்தாள் அவள்
என் காதலை வாங்க எவள் இங்கே.
கண்ணீர் துடைக்க ஆளிருக்க பாரம் குறைய
உன் கண்ணீர் துடைப்பது நான் இல்லை என்ற பாவம் அறிக்கும் என்னை.
கவிதை வரியில்லை தொடர்வது
கண்மணி உன் மேல ஆணையாக
எனக்கேதும் நேர்ந்துவிட்டால் கவலையில்லை
உனக்கேதும் நேர்ந்துவிட்டால் நானுமில்லை.
Comments
Post a Comment