குளிர்.
மழை வரும் கனமெல்லாம்
அவள் மடியில் படுத்துறங்க
ஆசைப் படுகிறேன்.
குளிரிலே என் தசை ஆட,
நடுக்கம், என் நகத்தையும் நகர்த்துவதை தவிர்க்க,
அவள் மடி வெப்பம் அணைக்க ஆசைப் படுகிறேன்.
என்ன செய்ய..?
நிலவுக்கும் குளிர்
அடிக்கும் போல ,
என் போர்வையையும் சேர்த்து,
அவள் தலைவரை
போர்த்தி உறங்குகிறாள்.
அன்று கூட அம்மாவாசை தான்.
Comments
Post a Comment