பூவிருக்குமிடம்.
செடியிலிருந்த ஒற்றைப்
பூவை பறித்து அவளிடம் கொடுத்தேன்.
முகத்தை சுளித்து,
“செடிகளுக்கு அழகு பூக்கள் தானே " என்றாள்.
செடிகளுக்கு அழகு பூக்கள் தான், என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை,
ஆனால் பூக்களுக்கு அழகு செடிகள் இல்லை என்றேன்.
சிந்தித்தவாரே இருந்த அவளை
திருப்பி ,பூவை அவள் கூந்தலில் வைத்தேன்.
புரிந்து கொண்டாள்
போலும் புன்னகைத்தாள்.
Comments
Post a Comment