இதயம்
ஏன் இத்தனை யோசனைகள் எனக்குள்
யார் யாரையோ பார்த்து ஆசைக் கொள்கிறேன்
யாவும் கிட்டே வருகையில் விளகி விடுக்கிறேன்
ஏதோ தெரியாத புதிர் எல்லாம் எழுப்பி
என்னை நானே புதைக்க நினைக்கிறேன்
காதல் கொள்ள மனம் முயன்றும்
காமம் கொள்ள உடல் முயன்றும்
கடந்து செல்லும் நான் யாரோ..?
பெண்கள் பார்த்தால் ஆசை தூவும்
பெறாத இன்பம் இசையும் சேரும்
பெற்று கொண்டு சென்றுவிட்டால்
தேடல் தீரும் என்ற பயமோ எனக்கு.?
பேர் எழுதி மடலிட்டு
பேனா முள்ளும் முத்தமிட்டு
கட்டி அணைத்து கட்டில் ஏறி
காலம் போக்க வினை எதற்கோ..?
எல்லாம் வேண்டும் என்ற எண்ணம் எனக்குள்
நேரம் கரைய ஆசை மாறும்
உள்ளம் எல்லாம் கரையாய் மாறி
ஊற்றெடுத்து உயிர் வரை பாயும்
செத்தப்பின அழுவோர் வேண்டி
சேகறிக்கிறேன் சொந்தகள் நானும்
மற்றப்படி யாரும் வேண்டாம்
மனைவியே என் மாற்றுச் சிந்தனை.
இரவிலே உறக்கம் இல்லை
வெளிச்சம் தான் நான் பெறவேயில்லை
கண்ணுள்ளே ஓடும் யாவும்
கையுக்கு வந்து சேரும் மாயை
அழித்து வர ஒரு நல்ல இதயம் வேண்டும்.
Comments
Post a Comment