வேண்டியவை மட்டும் வேண்டாம்
எட்டு அடுக்கு மாளிகை வேண்டாம்..
ஏக்கம் இல்லா வாழ்க்கை வேண்டாம்..
பட்டு போல் படுக்கை வேண்டாம்....
பாதம் தொட பலபலப்பு வேண்டாம்..
எச்சுவை அறியாமை வேண்டாம்..
எவையாயினும் அணைக்காமை வேண்டாம்..
உடலிலே பேதம் வேண்டாம்..
உறங்க தான் உழைக்க வேண்டாம்..
ஒளிக்கு சந்திரன் சூரியன் வேண்டாம்..
ஊதினால் வெளிச்சம் மறைய வேண்டாம்..
கூடலில் பாக தேடல் வேண்டாம்..
குழந்தை குதிக்க காரணம் வேண்டாம்
வேண்டுவன எல்லாம் வேண்டியவுடன்
வேண்டாம்..
வேண்டாதவை ஆயின் வேண்டுதல் முன்
வேண்டாம்...
சுவையிலே இனிப்பு மட்டும் வேண்டாம்..
சுழற்றி நான் ஆடும் சுகம் மட்டும் வேண்டாம்..
வாழ்க்கையில் இன்பம் மட்டும் வேண்டாம்..
வாழ்வதற்கு வாடகை பணமாக வேண்டாம்..
வாடிய பின்னர் வழக்குகள் வேண்டாம்..
வாதமிருக்கும் மதம் மட்டும் வேண்டாம்..
யாவையும் யவையாயினும்
யாவருக்கும் நடப்பன வேண்டும்..அவை
இருப்பவன் இல்லாதவன் இன்றி
இவ்வுலகில் இருக்கிறவன் இடத்திலேல்லாம்
வேண்டும்..
Comments
Post a Comment