சகி

தீ முதல் நீர் வரை
தினம் எனை
திண்ணும் தாமரை
மோக முடி வைத்து
மூச்சை நிறுத்தும் கண் அலை,
வேத வினையெல்லாம்
வேர்வையாவும் நெஞ்சலை
தூது சென்று போர் தொடுத்தாள்
உயிரை பறிக்கும் உதடு வலை
மேல ஏறியவன் வீழ்ந்திடவே
மேனி தாங்கா கடலலை
மிச்சம் வைத்து
உச்சம் தொட்டால் உயிர் வழியும்
ஆவலை.

பாலாடை நிறம் ஏந்தி
பட்டுடை அணிந்த வந்தாள்
மேலாடை நீக்கிடதான்
மேனி ஆசை எதற்கு இணை.?
பஞ்சம் நீக்கி பாசி ஆற்றி
பாவம் பார்த்து ஊட்டி விட்டாள்
தூங்கும் நேரம் போக
தொட்டில் ஆட்டுவேன் என்னவளை.

இடுப்பு கட்டி இனிப்பு தட்டி
இரவெல்லாம் முத்தம் ஊட்டி
முதுகிலே கோலம் காட்டி முடிவேலே
பாடம் சூட்டி, படுக்கையில் 
பட்டம் தீட்ட ஆசை கொண்டு
ஒரு வட்டம் இட்டேன்.

வயிறிலிலே என்ன ஓசை
அதற்கு கீழே, நான் காணாத இசை
மீசை தொடாத ஆசை பாடாத
புத்தன் போல கடந்த செல்ல
முத்தம் தர இடம் தேடி 
முடிவிலே இசையுடன் அசைப்போட்டேன்.

தேவதை உடை வேண்டும்
தேவையில் இடை வேண்டும்
கேளடி என் இருயிர் நீ
என்னுயிர் கூட்டி கொண்டு செல்லடி சகி.

Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்